வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அசத்தல் ஆட்டம். கில் கிறிஸ்டின் சாதனையை சமன் செய்த – ஜாஸ் பட்லர்

Buttler-and-Gilchrist
- Advertisement -

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முடிந்த வேளையில் அந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 202 ரன்களை மட்டுமே அடித்தது.

- Advertisement -

பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 32.5 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கினை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 45 பந்துகளை சந்தித்து 58 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த ஐந்தாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

- Advertisement -

அதோடு சேர்த்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்க்றிஸ்டின் சாதனையையும் சமன் செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்க்றிஸ்ட் 279 போட்டிகளில் விளையாடி 9,619 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க : என்னங்க ப்ரித்வி ஷா இப்படி ஆயிட்டாரு? சமீபத்திய பாதிப்பால் ஏற்பட்ட மாற்றம் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சரியாக 153-வது இன்னிங்ஸ்சின் போதுதான் 5000 ரன்களை கடந்திருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் 58 ரன்கள் அடித்ததன் மூலம் ஜாஸ் பட்லரும் 153 இன்னிங்ஸ்சில் 5000 ரன்களை கடந்து அவரது சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் அதிவேகமாக 5000 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் 114 இன்னிங்ஸ்களில் 5000 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement