என்னங்க ப்ரித்வி ஷா இப்படி ஆயிட்டாரு? சமீபத்திய பாதிப்பால் ஏற்பட்ட மாற்றம் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

Prithvi-Shaw
- Advertisement -

இந்திய அணியின் இளம் துவக்க வீரரான பிரித்வி ஷா கடந்த 2018-ஆம் ஆண்டே இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் இதுவரை 71 ஆட்டங்களில் பங்கேற்று விளையாடி இருக்கிறார். இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியை தலைமை தாங்கி வழி நடத்திய அவர் உலககோப்பை சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்த கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

உலககோப்பையை வென்ற கேப்டன் என்பது மட்டுமின்றி அற்புதமான துவக்க வீரர் என்பதனால் இவருக்கு 18 வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. அப்போதே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அறிமுக போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சதம் அடித்து தனது பயணத்தை துவங்கினார்.

- Advertisement -

அதன் பிறகு காயம், ஊக்க மருந்து பயன்படுத்தியதால் தடை, பொது இடத்தில் ரசிகர்களுடன் மோதல் என அடுத்தடுத்து சரிவினை சந்தித்து இன்றுவரை மீண்டும் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவிர்த்து வருகிறார்.

அதே வேளையில் உள்ளூர் தொடர்களிலும், ஐபிஎல் தொடர்களிலும் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் மீண்டும் இந்திய அணியின் அழைப்புக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து சென்ற பிரித்வி ஷா அங்கு நடைபெற்ற கவுண்டி தொடரில் பங்கேற்று அங்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

ஆனால் அங்கும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது நான்கு மாத ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இப்படி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து அவருக்கு தற்போது ஏற்கனவே இருந்ததை விடமாக கூடுதலாக எடை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் பார்ப்பதற்கு கூடுதல் பருமனுடன் இருக்கும் பிரித்வி ஷா தொப்பையுடன் காணப்படுகிறார்.

இதையும் படிங்க : தெ.ஆ மண்ணில் எல்லா மேட்ச்லயும் இந்தியா ஜெயிக்க முடியாது.. காரணம் அது தான்.. ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

இந்நிலையில் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பண்டுடன் அவர் இணைந்து பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பிரித்வி ஷா மும்பை விட கூடுதல் எடையுடன் இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனை கண்ட ரசிகர்கள் பிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா? இவர் இப்படி ஓவர் வெயிட் போட்டுள்ளாரே.. என்றும் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். அதேபோன்று பார்ப்பதற்கு தற்போது ப்ரித்வி ஷா இன்சமாம் உல் ஹக் போன்று இருப்பதாகவும் சிலர் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement