பட்லர் பேட்டிங் பண்ணாலே கேமராவில் என் முகத்தை காட்டுறாங்க – கலகலக்கும் வெளிநாட்டு வீரர் மனைவி

Jos Buttler Rassie Van Der Dushan Wife Lara
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் லீக் சுற்றில் 9 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்திடம் போராடி தோற்றது. இருப்பினும் மீண்டும் ஒரு வாய்ப்பாக எலிமினேட்டர் போட்டியில் வென்று வந்துள்ள பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் அந்த அணி மீண்டும் பைனலுக்குள் நுழைவதற்காக போராட உள்ளது. அந்த அணிக்காக பேட்டிங்கில் தூணாக இந்த வருடம் முதல் போட்டியில் இருந்தே இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திரம் ஜோஸ் பட்லர் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் மழை பொழிந்து வருகிறார்.

faf 1

- Advertisement -

அதிலும் முதல் 7 போட்டிகளில் 3 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து மிரட்டல் பேட்டிங் செய்ததால் 2016இல் 973 ரன்கள் விளாசி ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனைப் படைத்த விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 7 போட்டிகளில் அப்படியே நேர்மாறாக 1 அரை சதம் மட்டுமே அடித்த அவர் புஸ்வானமாக மாறியதால் விராட் கோலியின் சாதனையை உடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆரஞ்சு தொப்பி பட்லர்:
இருப்பினும் அவரின் ஆரம்ப கட்ட அதிரடி ஆட்டம் ராஜஸ்தானை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைப்பதற்கு முக்கிய பங்காற்றியது. அந்த நிலையில் குஜராத்துக்கு எதிராக நடந்த குவாலிபயர் 1 போட்டியில் முதல் 38 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் அடுத்த 18 பந்துகளில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து மொத்தம் 89 (56) ரன்களை விளாசி ராஜஸ்தான் 188/6 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்.

Jos Buttler 103

இருப்பினும் ஹர்டிக் பாண்டியா 40* (27) டேவிட் மில்லர் 68* (38) என முக்கிய குஜராத் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட்டிங் செய்ததால் 19.3 ஓவர்களில் 191/3 ரன்கள் எடுத்த அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நேரடியாக பைனலுக்கு சென்றது. ஆனாலும் இதுவரை பங்கேற்ற 15 போட்டிகளில் 718* ரன்களை குவித்து தொடர்ந்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள ஜோஸ் பட்லர் இந்த முக்கிய நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

- Advertisement -

2-வது கணவர்:
இந்நிலையில் ஜோஸ் பட்லர் பேட்டிங் மற்றும் திறமையை பார்த்து தற்போது அவரை தமது 2-வது கணவராக நினைக்க ஆரம்பித்து விட்டதாக அதே ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வேன் டெர் டுஷன் மனைவி லாரா டுஷன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ராஜஸ்தான் அணியில் உள்ள அஷ்வின், சஹால் ஆகியோரது மனைவிகளுடன் நிகழ்ந்த உரையாடலில் விளையாட்டாகவும் ஜாலியாகவும் அவர் பேசியது பின்வருமாறு. “நான் இப்போது ஜோசை எனது 2-வது கணவராக ஏற்றுக் கொண்டேன் என்று நினைக்கிறேன்.

அவரின் மனைவியான லூயிஸ் என்ற பெயருடன் நான் அழைக்கப்படுகிறேன். இதுவரை அவரின் மனைவியை நான் சந்தித்ததில்லை. நிறைய பேர் நான் ஜோஸ் பட்லர் மனைவி என்று நினைக்கின்றனர். அனேகமாக நாங்கள் ஒருசில தருணங்களில் ஒன்றாக கேமரா முன்பு தோன்றியதால் அப்படி நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஜோஸ் பட்லர் சதம் அடிக்கும் போது நாங்கள் உற்சாகமாக கொண்டாடுவதால் நான் அவருடைய ஒரு பகுதியாக இருக்கலாம் என்று அனைவரும் நினைப்பது சுவாரசியமானது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் ராசி வேன் டுஷன் (தனது கணவர்) அதிகம் விளையாடாததால் அதே உணர்வை அவரிடம் காட்ட முடியவில்லை. எனவே ஜோஸ் பட்லருக்கு உற்சாகத்துடன் ஆதரவு கொடுப்பதை மிகவும் ரசிக்கிறேன்” என்று கூறினார்.

vanderdussen

இந்த ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லர் பேட்டிங் செய்யும் போதெல்லாம் அதை படம்பிடிக்கும் ஐபிஎல் கேமராமேன் மற்றும் போட்டோகிராபர்கள் ராசி வேன் டெர் டுஷன் மனைவியான தம்மை காண்பிப்பதால் அனைவரும் தம்மை பட்லரின் மனைவி என்று நினைப்பதாக லாரா தெரிவிக்கிறார். ஆனால் நான் ராசி வேன் டெர் டுஷன் மனைவி என்று கூறும் அவர் தற்போது பட்லருக்கு ஆதரவளிக்க அவரது மனைவி ராஜஸ்தான் அணியுடன் இல்லாத காரணத்தால் அந்த இடத்தில் தாம் அவருக்கு கைதட்டி உற்சாகத்தை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தோனியால் தடகளத்தை விட்டு கிரிக்கெட் விளையாட வந்த வீராங்கனை. அதிரடியில் அசத்தும் – ருசிகர பின்னணி

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “15 புகைப்படம் பிடிப்பவர்கள் ஜோஸ் பட்லர் ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் செய்யும் போது கேமராவை என் பக்கம் திருப்புவது வித்தியாசமாக உள்ளது. நான் பட்லரின் மனைவி அல்ல என்று நினைக்கின்றனர். ஆனால் அவரின் மனைவி இல்லாத நிலையில் அந்த இடத்தில் நான் அவருக்கு ஆதரவுவளிக்க உள்ளேன்” என்று கூறினார்.

Advertisement