- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எப்படி விளையாடனும்னு ரோஹித் – ராகுல் கன்னத்தில் அறைந்து காண்பித்த பட்லர் – ஹேல்ஸ் ஜோடி, படைத்த 2 புதிய உலக சாதனைகள்

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்து எதிர்கொண்ட இந்தியா அற்புதமாக செயல்பட்டு பைனலுக்குச் சென்று பாகிஸ்தானுடன் மீண்டும் மோதுமென்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியே பரிசாக கிடைத்தது. புகழ்பெற்ற அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 168/6 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கடைசி நேரத்தில் சரவெடியாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 5 சிக்சருடன் 63 (33) ரன்களும் நங்கூரமாக நின்று காப்பாற்றிய விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (40) ரன்களும் சேர்த்தனர். அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் ஓவரிலிருந்தே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு ஓவருக்கு 10 ரன்கள் விளாசிய அலெஸ் ஹேல்ஸ் 86* (47) ரன்களும் ஜோஸ் பட்லர் 80* (49) ரன்களும் எடுத்தனர். அதனால் 16 ஓவரிலேயே 170/0 ரன்கள் குவித்த இங்கிலாந்து எளிதான வெற்றியை பதிவு செய்து நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

- Advertisement -

கன்னத்தில் கொடுத்த அறை:
மறுபுறம் பந்து வீச்சில் 1 விக்கெட் கூட எடுக்காமல் மோசமாக செயல்பட்ட இந்தியா 2007க்குப்பின் 2வது கோப்பை வெல்லும் கனவை சுக்குநூறாக உடைத்து இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. இப்போட்டியில் இந்தியாவின் பவுலிங் மோசமாக இருந்தது என்றால் ஓப்பனிங் பேட்டிங் அதை விட மோசமாக இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் ஆரம்பத்திலேயே ராகுல் வழக்கம் போல 5(5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை அதிரடியை துவக்காமல் 4 பவுண்டரிகளுடன் 27 (28) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அப்படி ஆரம்பத்திலேயே அவர்கள் கொடுத்த பின்னடைவால் முதல் 10 ஓவர்களில் 62/2 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா கடைசி 10 ஓவரில் விராட் கோலி மற்றும் பாண்டியாவின் போராட்டத்தால் 106/4 ரன்களை எடுத்தது. இதிலிருந்து ஓப்பனிங் ஜோடி தான் தோல்விக்கு காரணம் என்பது தெளிவாக புரிந்து கொள்ளலாம். மறுபுறம் நாக் அவுட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இங்கிலாந்து ஓப்பனிங் ஜோடி ரோகித் சர்மா – கேஎல் ராகுல் கன்னத்தில் அறைந்து காண்பித்தது என்றே கூறலாம்.

- Advertisement -

1. ஏனெனில் அவர்களது தடுமாற்றத்தால் பவர்பிளே ஓவரில் இந்தியா வெறும் 38/1 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி அதிரடியாக 63/0 ரன்கள் எடுத்து மிரட்டியது.

2. மேலும் முதல் 10 ஓவர்களில் இந்தியா 62/2 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 98/0 ரன்கள் எடுத்தது. அத்துடன் 11 – 15 ஓவர்களில் தொடக்க வீரர்கள் ஏற்படுத்திய பின்னடைவை சரி செய்த காரணத்தால் இந்தியா 38/1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இங்கிலாந்து 58/0 ரன்கள் விளாசியது. மேலும் கடைசி 5 ஓவரில் இந்தியா போராடி 68/3 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 16வது ஓவரிலேயே போட்டியை முடித்தது.

- Advertisement -

3. அதைவிட ரோஹித் – ராகுல் ஆகிய இந்திய ஜோடி சேர்ந்து வெறும் 5 பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் இங்கிலாந்து ஓப்பனிங் ஜோடி 13 பவுண்டரியும் 10 சிக்சர்களையும் பறக்க விட்டு வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

உலகசாதனை ஜோடி:
அப்படி இந்தியாவின் கனவை உடைத்த இங்கிலாந்து ஜோடி டி20 உலக கோப்பை வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை படைத்தது. அந்த பட்டியல்:
1. அலெக்ஸ் ஹெல்ஸ் – ஜோஸ் பேட்லர் : 170/0, இந்தியாவுக்கு எதிராக, 2022*
2. ரிலீ ரோசவ் – குயின் டீ காக் : 168, வங்கதேசத்துக்கு எதிராக, 2022
3. மகிலா ஜெயவர்தனே – குமார் சங்ககாரா : 166, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக

அத்துடன் டி20 உலக கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையும் அந்த ஜோடி படைத்தது. மேலும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இங்கிலாந்து ஜோடி என்ற பெருமையும் அவர்கள் பெற்றனர்.

- Advertisement -
Published by