இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதைய மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் மற்றும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பிப்ரவரி மாதம் ஆகிய இரண்டு கட்டங்களாக ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மாவை எடுக்க நாங்க தயார் :
இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐ.பி.எல் நிர்வாகம் வகுக்கும் சில விதிமுறைகளின் அடிப்படையில் மெகா ஏலமானது நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் வீரர்கள் அணி மாற்றம் நடைபெற இருப்பதினால் இந்த ஏலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த முறை கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது :
ரோகித் சர்மாவின் பதவி நீக்கம் தான். ஏனெனில் ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது அந்த அணியின் வீரர்களுக்கு மத்தியிலேயே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இதன் காரணமாக அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை அணியை விட்டு வெளியேறி ஏலத்திற்கு வந்தால் நாங்கள் எடுக்க தயார் என லக்னோ அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இதையும் படிங்க : உண்மையிலேயே இந்திய ரசிகர்கள் அந்த விதத்தில் கிரேட்.. அதை நானே நேரில் பாத்திருக்கிறேன் – கம்ரான் அக்மல்
ஐபிஎல் தொடரின் ஏலத்தின் போது ரோகித் சர்மா இடம்பெற்றால் நிச்சயம் அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எடுக்க தயாராக இருக்கிறோம். அவர் ஒரு தலை சிறந்த வீரர் மட்டுமின்றி தலை சிறந்த கேப்டன். எந்த ஒரு அணியும் அவர்கள் அவரை ஏலத்தில் எடுக்க மகிழ்ச்சியாக தான் இருக்கும். நிச்சயம் அவர் ஏலத்துக்கு வரும் பட்டத்தில் அவருக்காக பெரிய தொகைக்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். என ஜான்டி ரோட்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



