இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடரானது நடைபெற்று கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இருதரப்பு தொடர் நடைபெறவில்லை என்றாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் பிரபலங்களும் விரும்புகின்றனர்.
இந்திய ரசிகர்கள் கிரேட் :
அதோடு அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் வேளையில் அங்கு இந்திய அணி பங்கேற்று விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதோடு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை அங்கு வந்து விளையாடுமாறு தொடர்ச்சியான அழைப்பினை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் கிரிக்கெட்டை நேசிப்பதில் உண்மையாகவே இந்திய ரசிகர்கள் சிறந்தவர்கள் என்பதை நான் பலமுறை நேரில் கண்டிருக்கிறேன் என்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி உலக கிரிக்கெட் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் போட்டி என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் பலமுறை இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறோம். அப்போதெல்லாம் இந்திய ரசிகர்கள் எங்களின் மீது நிறைய அன்பும், ஆதரவையும் அளித்திருந்தனர். அதேபோன்று உலகில் ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்று கிரிக்கெட் போட்டிகளை ரசித்து விளையாட வேண்டும் எனில் இந்தியாவிற்கு சென்று விளையாடலாம்.
அந்த அளவுக்கு இந்திய ரசிகர்கள் உண்மையான கிரிக்கெட்க்கு ஆதரவினை அளித்து வருகின்றனர். நான் கூட இந்தியாவில் பலமுறை வெளியே சென்றுள்ளேன். அப்போதெல்லாம் ரசிகர்கள் நல்ல வரவேற்பனை கொடுத்தனர். அதேபோன்று இந்திய அணியும் பாகிஸ்தான் வரும்போது அவர்களுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க : இதை செஞ்சா இந்தியா வந்து விளையாடும்.. இல்லனா வாய்ப்பில்லை.. பாகிஸ்தானுக்கு ஹர்பஜன் போட்ட கண்டிஷன்
அதனை கங்குலி, சேவாக் போன்ற வீரர்களே வெளிப்படையாக பேசியுள்ளனர். அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நிச்சயம் சாம்பியன்ஸ் தொடரில் விளையாட வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கம்ரான் அக்மல் பேசியது குறிப்பிடத்தக்கது.



