என்னய்யா உருட்டா இருக்கு.. சொல்லவே இல்ல.. இலங்கை வாரியத்தின் போலியான அறிவிப்பை மறுத்த ஜான்டி ரோட்ஸ்

Jonty Rhodes
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 1996 உலக சாம்பியனாக சாதனை படைத்த இலங்கை சமீப காலங்களில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. அதன் உச்சமாக 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் நடப்பு சாம்பியனாக தங்களுடைய சொந்த மண்ணில் களமிறங்கி இந்தியாவுக்கு எதிராக 50 ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணி மோசமான சாதனை படைத்தது.

அதை விட 2023 உலகக் கோப்பையில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் இந்தியாவின் முகமது சிராஜ் வேகத்துக்கு எதிராக இலங்கை வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அதனால் கடுப்பான இலங்கை அரசு தங்களுடைய வாரியத்தை கலைப்பதாக அறிவித்தது. மறுபுறம் விதிமுறையை மீறி அரசு தலையிட்டதால் இலங்கை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்தது.

- Advertisement -

சொல்லவே இல்ல:
இருப்பினும் பிரச்சனைகளை சரி செய்வதாக இலங்கை வாரியம் உறுதியளித்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசு தங்களின் தலையீட்டை திரும்ப பெற்றது. அதனால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி பச்சைக்கொடி காட்டியது. அதை தொடர்ந்து ஜிம்பாப்வேவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்ற இலங்கை புதிய மறுமலர்ச்சியையும் உத்வேகத்தையும் பெற்றுள்ளது

இந்நிலையில் தங்களுடைய அணிக்கு வலுசேர்ப்பதற்காக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் இலங்கையின் புதிய ஸ்பெஷலிஸ்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல இந்தியாவின் பரத் அருண் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இலங்கையைச் சேர்ந்த அலெக்ஸ் கவுண்டௌரி உடற்பயிற்சி ஆலோசகராகவும் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதை இலங்கையில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் ஒன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. அதைப் பார்த்த ஜான்டி ரோட்ஸ் “ஹ்ம்ம். எனக்கே இது செய்தியாகும். உங்களுடைய செய்தியின் உண்மையை சோதியுங்கள்” என்று பதிலளித்துள்ளார். அதாவது இலங்கையின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்படுவது பற்றி அந்நாட்டு வாரியம் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று ஜான்டி ரோட்ஸ் மறைமுகமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கடைசி 4 ஓவரில் அவரை உலகின் எந்த பவுலராலும் அடக்க முடியாது.. அஸ்வின் வியப்பான பாராட்டு

அதற்கு அந்த செய்தி நிறுவனம் மீண்டும் இலங்கை வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை அவருக்கு ஆதாரமாக காண்பித்தது. ஆனால் அதற்கு “இப்போதும் ஹ்ம்ம்” என்று ரோட்ஸ் பதிலளித்துள்ளார். அதாவது பயிற்சியாளர் வேலை பற்றி இலங்கை வாரியம் எதுவும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று ரோட்ஸ் ஒன்றுக்கு 2 முறை கூறியுள்ளார். அத்துடன் செய்தியில் பார்த்து தான் இது பற்றி தாமே தெரிந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய பதிலை பார்க்கும் ரசிகர்கள் “என்னய்யா உருட்டா இருக்கு. அவரிடம் சொல்லலாம் அவருக்கே தெரியாமல் அவரை பயிற்சியாளராக போட்டுட்டீங்களா” என்று இலங்கை வாரியத்தை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement