இந்தியாவின் நம்பர் 1 பீல்டர் இவர்தான். இவரின் பீல்டிங் ஸ்கில் வேறலெவல் – ஜான்டி ரோட்ஸ் கணிப்பு

Rhodes
- Advertisement -

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றை மட்டுமே திறமையாக வைத்து கிரிக்கெட்டில் வெற்றி பெற்றுக்கொண்டிருந்த காலம் தாண்டி வெறும் பீல்டிங்கினால் கூட வெற்றி பெற முடியும் என்று நிரூபித்தவர் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ். இவர்தான் முதன்முதலில் சச்சின் டெண்டுல்கரை மூன்றாவது நடுவர் மூலம் கேமராவை வைத்து ரன்அவுட் செய்த பெருமைக்குரியவர்.

rhodes 2

- Advertisement -

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். இந்தியா உருவாக்கிய வீரர்களில் மிகச் சிறந்த பில்டர் யார் என்பது குறித்து பேசியுள்ளார் ஜான்டி ரோட்ஸ். இதில் நாம் எதிர்பார்த்தபடி விராட் கோலியையோ, ரவீந்திர ஜடேஜாவியயோ முகமது கைப் அல்லது யுவராஜ் சிங்கின் பெயரையோ அவர் கூறவில்லை.

அதற்கு மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னாவின் பெயரை கூறியிருக்கிறார் ஜான்டி ரோட்ஸ். இதுகுறித்து அவர் ஐசிசி இணையதளத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில்…

Raina

ரெய்னா எப்போதும் களத்தில் பாசிட்டிவாக இருப்பார். பந்து எங்கு சென்றாலும் எப்படியாவது ஓடிப் பிடித்து விட வேண்டும் என்றுதான் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கும், வீணாக டைவ் அடிப்பது தேவையில்லாமல் உருளுவது ஆகியவற்றை பெரும்பாலும் தவிர்த்து விடுவார். அதனால்தான் அவரால் நேரத்தை மிச்சம் செய்து பந்தை நோக்கி ஓட முடிகிறது. அடுத்த பந்தை உடனடியாக எடுத்து வீச முடிகிறது.

- Advertisement -

டைவ் அடித்து பந்தை பிடிப்பதை விட அதை சரியான முறையில் நின்று பிடித்தால் போதும் என்று நினைப்பவர். அவரது மிகப்பெரிய விசிறியாக இருந்திருக்கிறேன். இந்திய அணி உருவாக்கிய பீல்டர்கள் அவர்தான் மிகச்சிறந்த ஃபீல்டர். ஆடுகளம் வழுவழுப்பாக இருந்தாலும் சரி, கட்டாந்தரையாக இருந்தாலும் சரி அனைத்திலும் அதற்கேற்ப ஓடிச்சென்று பந்தய பிடிப்பதில் வல்லவர்.

Raina

பந்தை பிடித்தால் போதும் அதுதான் அவரது நோக்கமாக இருக்கிறது. அவர்தான் மிகச்சிறந்த பீல்டர் என்று கூறியுள்ளார் ஜான்டி ரோட்ஸ். ரெய்னா கடைசியாக இந்திய அணிக்கு 2018 ஆம் ஆண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5515 ரன்களையும் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1605 ரன்களை குவித்துள்ளார்.

Advertisement