எனது 100 ஆவது டெஸ்ட் கேப்பை நான் அவருக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன் – உருக்கமாக பேசிய ஜானி பேர்ஸ்டோ

Bairstow
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்து தொடரை கைப்பற்றி விட்டது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவிற்கு நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது.

- Advertisement -

கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜானி பேர்ஸ்டோ இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் என 5974 ரன்களை குவித்துள்ளார்.

மேலும் இந்திய அணிக்கு எதிரான இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நூறாவது போட்டியையும் அவர் பூர்த்தி செய்ய இருக்கிறார். இந்நிலையில் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகப்பெரிய விஷயம். என்னுடைய நூறாவது டெஸ்ட் கேப்பை எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஏனெனில் வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான். எனது தந்தை இறக்கும்போது பத்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு மூன்று இடங்களில் வேலை செய்து எங்களை அவர் வளர்த்தார்.

இதையும் படிங்க : சபாஷ் அற்புதமான முடிவு.. அப்போல்லாம் ஒரே டீம்ல 7 – 8 பிளேயர்ஸ் இருப்போம்.. பிசிசிஐக்கு சச்சின் பாராட்டு

அதோடு இரண்டு முறை புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதும் எனது அம்மா வலிமையாக தான் இருந்தார். எனவே இந்த கௌரவத்தை நான் அவருக்கு வழங்க இருக்கிறேன் என உருக்கமாக பேசியிருந்தார். தர்மசாலா டெஸ்ட் போட்டியானது ஜானி பேர்ஸ்டோவுக்கும் மட்டுமின்றி தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் நூறாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement