சபாஷ் அற்புதமான முடிவு.. அப்போல்லாம் ஒரே டீம்ல 7 – 8 பிளேயர்ஸ் இருப்போம்.. பிசிசிஐக்கு சச்சின் பாராட்டு

Sachin Tendulkar 4
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஷ்ரேயாஸ் ஐயர் – இஷான் கிசான் ஆகிய 2 முக்கியமான வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தியும் அதைக் கேட்காததால் அந்த 2 வீரர்கள் மீது பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சமீபத்திய வருடங்களாகவே பல முன்னணி இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு கொடுக்கும் முன்னுரிமையை ரஞ்சிக் கோப்பைக்கு கொடுப்பதில்லை. எனவே இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான ரஞ்சிக் கோப்பையை புறக்கணிக்க நினைக்கும் வீரர்களுக்கு தக்க பாடத்தை புகட்டியுள்ளதாக பிசிசிஐ எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு கபில் தேவ் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:
இந்நிலையில் இந்த வருட ரஞ்சிக் கோப்பையின் செமி ஃபைனலில் வென்று 48வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள தங்களுடைய மும்பை அணிக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய காலத்தில் மும்பை அணியில் 7 – 8 இந்திய வீரர்கள் இடம் பெறும் அளவுக்கு ரஞ்சிக்கோப்பை மிகவும் தரம் மிகுந்த தொடராக இருந்ததாகவும் சச்சின் கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட ரஞ்சிக் கோப்பைக்கு மீண்டும் சமமான முன்னுரிமை கொடுக்கும் முடிவை எடுத்துள்ள பிசிசிஐக்கு பாராட்டு தெரிவிக்கும் சச்சின் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனல் சிறப்பாக இருக்கிறது. அதில் பேட்டிங்கில் கம்பேக் கொடுத்த மும்பை ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு செமி ஃபைனல் மத்திய பிரதேசத்திற்கு 90 ரன்களும் விதர்பாவுக்கு 4 விக்கெட்டுகளும் தேவை என்ற சமமான நிலையில் இருக்கிறது”

- Advertisement -

“என்னுடைய கேரியர் முழுவதிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்த சமயங்களில் மும்பைக்காக நான் ஆர்வத்துடன் விளையாடினேன். வளரும் போது எங்களுடைய உடை மாற்றும் அறையில் 7 – 8 இந்திய வீரர்கள் இருந்தனர். அவர்களுடன் ஒன்றாக விளையாடியது வேடிக்கையானதாக இருந்தது. இந்திய வீரர்கள் தங்களுடைய உள்ளூர் அணிக்கு விளையாட திரும்பும் போது இளம் வீரர்களின் தரம் உயர்வதுடன் புதிய திறமை கண்டறியப்படும்”

இதையும் படிங்க: 2018 சம்பவம் 7 விக்கெட்ஸ்.. வெற்றியை இழுத்துக் கொண்டு வந்தேன்.. கேரியரின் சிறந்த பவுலிங் பற்றி பேசிய அஸ்வின்

“மேலும் அது தேசிய வீரர்கள் சில நேரங்களில் தங்களுடைய அடிப்படையை கண்டறிவதற்கான வாய்ப்பையும் கொடுக்கிறது. கடந்த காலங்களில் டாப் வீரர்கள் உள்ளூர் தொடரில் விளையாடிய போது ரசிகர்கள் ஆர்வத்துடன் அதைப் பின்பற்றி தங்களுடைய அணிகளுக்கு அதிகமான ஆதரவை கொடுத்தனர். தற்போது உள்ளூர் கிரிக்கெட்டுக்குபிசிசிஐ சமமான முன்னுரிமை கொடுக்கும் முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement