3வது போட்டியில் இந்தியாவை சாய்க்க திட்டத்தை வெச்சுருக்கோம்.. ஆப்கானிஸ்தான் கோச் பேட்டி

Jonathan Trott
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் நட்சத்திர வீரர் ரசித் கான் காயத்தால் வெளியேறியது ஆப்கானிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் எஞ்சிய வீரர்களுடன் முதல் 2 போட்டிகளில் விளையாடிய அந்த அணி முடிந்தளவுக்கு போராடியும் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக 2வது போட்டியில் 172 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இருப்பினும் சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி அந்த இலக்கை மிகவும் எளிதாக சேசிங் செய்தனர். அந்த வகையில் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் ஆட்டம் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

முன்னேற்றம் தேவை:
இதை தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் கடைசி போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதில் கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் பாடத்தை கற்றுக் கொண்டு ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 7 – 16 வரையிலான மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அளவுக்கு பந்து வீசும் திட்டம் தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் சமீப காலங்களில் நிறைய டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதனால் ஒரு அணியாக டி20 கிரிக்கெட்டில் செட்டாக எங்களுக்கு சற்று நேரம் தேவைப்படுகிறது”

- Advertisement -

“கடந்த வருடம் 50 ஓவர் ஆசிய மற்றும் உலகக் கோப்பைக்கு தயாராக எங்களை நாங்கள் கட்டமைத்தோம். எனவே நாளைய போட்டியில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம் என்று நம்புகிறேன். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் நன்றாக அடிக்க வேண்டும். கடந்த போட்டிகளில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதை நிறுத்துவதற்கு எதிரணி தடுமாறியதை நாங்கள் பார்த்தோம்”

இதையும் படிங்க: நல்ல டேலன்ட் இருந்தும் அதை ஏன் வீணடிக்குறீங்க? இளம் இந்திய வீரருக்கு அட்வைஸ் கொடுத்த – சல்மான் பட்

“சொல்லப்போனால் மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் கடைசி 10 ஓவரில் நாங்கள் 110 ரன்கள் அடித்தோம். ஆனால் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் மிடில் ஓவர்களில் பந்து வீச்சில் தடுமாறினோம். எனவே இம்முறை மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது நாங்கள் அதிக அழுத்தத்தை போட வேண்டும். குறிப்பாக முதல் போட்டியில் நாங்கள் செய்ததை 2வது போட்டியில் செய்ய தவறினோம். எனவே உலகக்கோப்பை போன்ற தொடரில் போட்டியிடுவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக அசத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement