SA vs WI : தெ.ஆ’வை கருணையின்றி விளாசிய வெ.இ உலக சாதனை, அடித்து நொறுக்கிய சார்லஸ் – கெயிலை மிஞ்சி அதிவேக சாதனை

Johnson Charles WI vs RSA
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த நடைபெற்ற ஒருநாள் தொடரை மழையின் உதவியுடன் 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் செய்தது. அதைத்தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மார்ச் 26ஆம் தேதியன்று செஞ்சூரியனில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரண்டன் கிங் ஆரம்பத்திலேயே 1 ரன்னில் அவுட்டாகி சென்றார்.

ஆனால் அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் கொஞ்சம் கூட கருணை காட்டாமல் தென்னாபிரிக்க பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டார். அவருக்கு கை கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் தனது பங்கிற்கு தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதே வேகத்தில் 10 ஓவரிலேயே 2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய இந்த ஜோடியில் கெய்ல் மேயர்ஸ் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 51 (27) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

அந்த நிலையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் 2 ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் ஓயாமல் சரவெடியாக பேட்டிங் செய்த ஜான்சன் சார்லஸ் வெறும் 39 பந்திலேயே சதமடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2016 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் கிறிஸ் கெயில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும். தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் 10 பவுண்டரி 11 சிக்சருடன் 118 (46) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனை தகர்த்த அவர் மற்றுமொரு வரலாறு படைத்தார். இதற்கு முன் கடந்த 2007 டி20 உலக கோப்பையில் இதே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்த கிறிஸ் கெயில் 117 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அவருக்கு பின் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் போவல் தனது பங்கிற்கு 1 பவுண்டரி 2 சிக்சருடன் 28 (19) ரன்கள் எடுத்து அவுட்டாக கடைசி நேரத்தில் ரொமாரியா செஃபார்டு 1 பவுண்டரி 4 சிக்சருடன் 41* (18) ரன்களும் ஓடின் ஸ்மித் 11* (5) ரன்களும் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 20 ஓவரில் 258/5 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. 258/5 : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, செஞ்சூரியன், 2023*
2. 245/6 : இந்தியாவுக்கு எதிராக, லாடர்கில் , 2016
3. 236/6 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க், 2016

அதை விட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை உடைத்த வெஸ்ட் இண்டீஸ் புதிய உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. 258/5 : வெஸ்ட் இண்டீஸ், செஞ்சூரியன், 2023*
2. 237/3 : இந்தியா, கௌகாத்தி, 2022
3.236/6 : வெஸ்ட் இண்டீஸ், ஜோகன்ஸ்பர்க், 2016

இதையும் படிங்க: இந்திய வீரர்களான அவங்க 2 பேரை அவுட் ஆக்கனுனா மணிக்கணக்கா காத்திருக்கனும் – சக்லைன் முஷ்டாக் பேட்டி

அப்படி சுமாராக பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து உங்களுக்கு சொந்த மண்ணில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் தென் ஆப்பிரிக்கா அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement