6, 6, 4, 6, 6, 6.. ஒரே ஓவரில் 34 ரன்ஸ்.. மஹாராஜை பொளந்த பேர்ஸ்டோ.. எஸ்ஏ20 தொடரில் சரவெடி சாதனை

Johnny Bairstow
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் 2025/26 எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அதில் ஜனவரி 5ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற 14வது போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவரில் 176/7 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கோன்னார் எஸ்தர்ஹுய்ஸன் 52 (33) ரன்கள் எடுத்தார். அவருடன் செர்பான் ரூத்தர்போர்ட் அதிரடியாக 47* (22), விஹான் லப் 21 (19) ரன்களை எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ஆடம் மில்னே, அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணிக்கு குவிண்டன் டீ காக் அதிரடியாக ரன்களை குவித்தார்.

- Advertisement -

ஒரே ஓவரில் 34 ரன்ஸ்:

அவருடன் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ பிரிட்டோரியா பவுலர்களை பந்தாடினார். ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்களுக்கு மேல் குவித்த அந்த ஜோடியில் டீ காக் அரை சதமடித்தார். அவருடன் சேர்ந்து 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஜானி பேர்ஸ்டோவும் அரை சதத்தை நெருங்கினார்.

அப்போது தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தரமான ஸ்பின் பவுலரான கேசவ் மகாராஜ் 12வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சரை பறக்க விட்ட பேர்ஸ்டோ 35 பந்துகளில் அரை சதத்தை தொட்டார். அடுத்த பந்தில் 92 மீட்டர் சிக்ஸரை பறக்க விட்ட அவர் 3வது பந்திலும் மற்றொரு சிக்சரை தெறிக்க விட்டார்.

- Advertisement -

சரவெடி சாதனை:

4வது பந்தில் பௌண்டரியை அடித்த அவர் கடைசி 2 பந்துகளிலும் மஹாராஜ்க்கு கருணை காட்டாமல் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டார். அந்த வகையில் 6, 6, 4, 6, 6, 6 என 34 ரன்களை குவித்த பேர்ஸ்டோ 2022 முதல் நடைபெற்று வரும் எஸ்ஏ20 தொடரில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மறுபுறம் ஒரே ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையை மஹாராஜ் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: கில் ஐடியா சூப்பர்.. 15 நாள் கேம்ப் இல்லனா.. இங்கிலாந்து மாதிரி இந்தியாவும் தோற்கும்.. அஸ்வின் வரவேற்பு

தொடர்ந்து அதிரடி காட்டிய பேர்ஸ்டோ 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 85* (45) ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாத டீ காக் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 79* (41) ரன்கள் எடுத்தார். அதனால் 14.2 ஓவரிலேயே 177/0 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான மிரட்டலான வெற்றி பெற்றது.

Advertisement