- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே ஓவரில் 18 பந்துகள் 12 ஒய்ட் போட்ட ஆஸி பவுலர்.. கடுப்பான பிரட் லீ.. கடைசி வரை ஓவர் முடியாத வினோதம்

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜூலை 29ஆம் தேதி லீசெஸ்டர் நகரில் லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் மிகவும் சுமாராக பேட்டிங் செய்து 11.5 ஓவரில் வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு ஷான் மார்ஷ் 7, கிறிஸ் லின் 6, டார்சி ஷார்ட் 2, டேன் கிறிஸ்டின் 0, பெர்குசன் 10, பென் கட்டிங் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதிகபட்சமாக பென் டங் 26 (14) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஒரே ஓவரில் 18 பதுளால்:

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சயீத் அஜ்மல் 3.5 ஓவரில் 16 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு சர்ஜில் கான் 32* (23), சோஹைப் மக்ஸூட் 28* (26) ரன்கள் எடுத்தனர். அதனால் 7.5 ஓவரிலேயே 75/0 ரன்களை எடுத்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் 4வது வெற்றியைப் பெற்ற அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நிலையில் ஆஸ்திரேலியா 2வது தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் 7 ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 55/0 என்ற நிலையில் இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஜான் ஹேஸ்டிங்ஸ் 8வது ஓவரை வீசினார். அப்போது அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் முயற்சித்த அவர் முதல் பந்தையே கிட்டத்தட்ட பிட்ச்சிக்கு வெளியே போட்டார்.

- Advertisement -

கடுப்பான பிரட் லீ:

அதனால் அம்பையர் ஒயிட் கொடுத்த நிலையில் அடுத்த 4 பந்துகளையும் அவர் ஒய்டாக போட்டுத் தள்ளினார். அதற்கும் நடுவர் ஒய்ட் கொடுத்த நிலையில் ஒரு வழியாக 6வது முயற்சியில் ஹேஸ்டிங்ஸ் முதல் பந்தை வெற்றிகரமாக வீசினார். 2வது பந்தில் பௌண்டரியை கொடுத்த அவர் 3வது பந்தில் நோபால் போட்டார். அதற்காக வீசிய மறுபந்தையும் ஒய்ட் போட்ட அவர் பின்னர் லெக் பைஸ் வாயிலாக ஒரு ரன் கொடுத்தார்.

4வது பந்தில் மீண்டும் ஒயிட் போட்டு பின்னர் ரன் வழங்காத அவர் 5வது பந்தில் சிங்கிள் கொடுத்தார். அதோடு முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கடைசி பந்தில் மீண்டும் ஒய்ட் போட்டார். அதனால் “இதோடு முடியுங்கள், கமான்” என்று நேரலை வர்ணனையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆலன் வில்கின்ஸ் வர்ணனை செய்தார். ஆனால் அடுத்த 4 பந்துகளையும் ஹேஸ்டிங்ஸ் ஒய்டாகவே போட்டு நடுவரை கடுப்பேற்றினார்.

இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மருத்துவக்குழு கூறுவது என்ன? – விவரம் இதோ

இறுதியில் அவர் ஓவரை போட்டு முடிப்பதற்கு முன்பாகவே எக்ஸ்ட்ரா ரன்களால் 7.5 ஓவருடன் போட்டி தாமாகவே முடிந்த வினோதம் அரங்கேறியது. மொத்தத்தில் ஒரே ஓவரில் ஜான் ஹேஸ்டிங்ஸ் 18 பந்துகளைப் போட்டு 12 ஒய்ட்களை வாரி வழங்குகினார். ஆனால் அப்போதும் அவர் ஓவரை முழுமையாக்காமல் போட்டியை முடித்தது கேப்டன் பிரட் லீயை கடுப்பேற்றியது.

- Advertisement -