ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாட முடியாத சூழ்நிலையில் நட்சத்திர வீரர் – ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

rr
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் தற்போது எல்போ காயம் காரணமாக அவதிப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. மேலும் அவர் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க போவதில்லை என்றும் அதன் பின்னர் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர்களில் பாதி தொடர் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.

archer 1

- Advertisement -

ஓய்வில்லாமல் டெஸ்ட் மற்றும் டி20 மேட்ச்களில் ஆடிவந்த ஆர்ச்சர் தற்போது எல்போ காயம் காரணமாக அவதிப்பட்டுள்ளார். ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த காயம் எப்படி இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.தொடர்ந்து அவர் சிறப்பாக பங்கேற்க போதுமான ஓய்வு மற்றும் சிகிச்சையை கட்டாயம் அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஆரோக்கியம் மிக மிக முக்கியம்.

எனவே அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் மீண்டும் பழையபடி நல்ல ஆரோக்கியத்துடன் பந்துவீசும் பட்சத்தில் அவரை மறுபடியும் விளையாட நாங்கள் அனுமதிப்போம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மோர்கன் ஆர்ச்சரின் உடல் ஆரோக்கியம் நிச்சயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று, அவருக்கு இந்த ஓய்வு மிகமிகத் தேவை என்றும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டு வந்து பழையபடி விளையாடுவார் என்று கூறியுள்ளார்.

archer 1

ஒருநாள் தொடரில் விளையாட போவதில்லை அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் பாதி போட்டியில் விளையாட போவதில்லை என்று வந்த செய்தியை அடுத்து ராஜஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஏனெனில் சென்ற ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி ஆர்ச்சர் மொத்தமாக 20 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் .

Archer 1

அவரது பந்துவீச்சு எகானமி 6.56 ஆகும். மேலும் பேட்டிங்கிலும் 113 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 180 (179.37) ஆகும். எனவே பாதி மேட்சுகளில் ஆடப் போகாத ஆர்ச்சரின் இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்ற கேள்வியுடன் ராஜஸ்தான் அணி ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement