KKR vs RR : பவுலிங்கில் ஜொலிக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் ஜொலித்த ராஜஸ்தான் வீரர் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமை

Archer-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Smith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும், ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Riyan

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரரான ஆர்ச்சர் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து பவுலிங்கில் கலக்கி வந்தார். ஆனால், நேற்று 4 ஓவர்களை வீசி விக்கெட்டுகளை எடுக்கமுடிடாமல் திணறினார். இருப்பினும் அந்த 4 ஓவர்களில் 28 ரன்கள் ,மட்டுமே கொடுத்து எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். மேலும் பேட்டிங்கிலும் ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டார்.

Archer

ராஜஸ்தான் அணி 15.2 ஓவர்களில் 123 ரன்களை எடுத்திருந்தபோது 7 விக்கெட்டாக ஆர்ச்சர் களமிறங்கினார். அப்போது வெற்றிக்கு 28 பந்துகளில் 52 ரன்கள் தேவை. இறுதிநேரத்தில் அதிரடியாக ஆடிய ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement