
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய வேளையில் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 216 ரன்களை குவிக்க அடுத்ததாக 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி சன் ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்ததது. அதனால் சன் ரைசர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
அதே வேளையில் இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்த ராஜஸ்தான் அணி தங்களது முதல் தோல்வியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் முதல் பந்திலேயே அவர் சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மாவை வீழ்த்தி அசத்தினார். இப்படி அவர் அபிஷேக் ஷர்மாவை போட்டியின் முதல் பந்திலேயே வீழ்த்தியதன் மூலம் முகமது ஷமிக்கு அடுத்து இரண்டாவது பந்துவீச்சாளராக ஆர்ச்சர் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ஜோப்ரா ஆர்ச்சர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : முதல் பந்திலேயே அவரை தூக்குவேன்னு சொல்லிட்டு தான் இந்த போட்டியில் ஆடுனேன் – ஆட்டநாயகன் பூரிப்பு
ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை போட்டியின் முதல் பந்திலேயே அதிகமுறை விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக முகமது ஷமி முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை ஐந்து முறை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் அவருக்கு அடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது பந்துவீச்சாளராக போட்டியின் முதல் பந்தில் நான்காவது முறை விக்கெட்டை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.