கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து தோல்விக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தது.
முகமது ஷமியின் சாதனையை சமன் செய்த ஜோப்ரா ஆர்ச்சர் :
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணியானது 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் அந்த அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்துவீசி 35 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அவர் எடுத்த இந்த ஒரு விக்கெட்டின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்து அசத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்றைய போட்டியின் போது ஆட்டத்தின் முதல் பந்தியிலேயே டீம் சைபர்ட்டை அவர் ஆட்டமிழக்க வைத்தார். இதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்டத்தின் முதல் பந்தியிலேயே அதிக முறை விக்கெட் வீழ்த்திய பவுலராக இருந்த முகமது ஷமியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க : இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி.. 3 வீரர்களை பாராட்டி முதல் வெற்றி குறித்து பேசிய – அஜின்க்யா ரஹானே
முகமது ஷமி ஐபிஎல் போட்டிகளில் இதுவரை ஐந்து முறை தான் வீசிய முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தியிருந்த வேளையில் தற்போது ஜோப்ரா ஆர்ச்சரும் 5 முறை விக்கெட்டுகளை போட்டியின் முதல் பந்திலேயே எடுத்து அவரது சாதனையை சமன் செய்துள்ளார். அதோடு மட்டுமின்றி கடந்த மூன்று போட்டிகளாக அவர் முதல் பந்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



