இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி.. 3 வீரர்களை பாராட்டி முதல் வெற்றி குறித்து பேசிய – அஜின்க்யா ரஹானே

Ajinkya Rahane
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

தங்களது முதல் வெற்றி குறித்து பேசிய : அஜின்க்யா ரஹானே

அதன்படி இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவிக்க பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்று இங்கு நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொடரில் பெற்ற இந்த முதல் வெற்றி மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாகவும் இருக்கிறது. இந்த போட்டியில் ரிங்கு சிங், அனுகுல் ராய், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது விக்கெட்டுகள் விழுந்தாலும் சரியான நேரத்தில் தேவையான பாட்னர்ஷிப் கிடைத்தது. போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறும் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை கையில் எடுத்து விளையாடினர். ஆனாலும் பேட்டிங்கில் இன்னும் சில முன்னேற்றங்கள் தேவை என்பது அவசியம். கார்த்திக் தியாகி மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் துவக்க வீரராக மோசமான வரலாற்று சாதனைக்கு ஆளான அஜின்க்யா ரஹானே – விவரம் இதோ

இளம் வீரரான அவரிடம் நல்ல திறமை இருக்கிறது. அதோடு நல்ல தன்னம்பிக்கையுடனும் அவர் பந்து வீசுகிறார். இவ்வளவு வேகத்தில் அவர் பந்து வீசுவதை பார்ப்பதற்கும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் நிறைய விடயங்களை கற்று வருகிறோம். இந்த தொடரில் அடுத்து வரும் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றும் அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement