ஐ.பி.எல் போட்டிகளில் துவக்க வீரராக மோசமான வரலாற்று சாதனைக்கு ஆளான அஜின்க்யா ரஹானே – விவரம் இதோ

Rahane DuckOut
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் கே.கே.ஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் கே.கே.ஆர் அணியானது முதல் ஆறு போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக இந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியானது கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

மோசமான சாதனையை நிகழ்த்திய அஜின்க்யா ரஹானே :

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை குவித்ததால் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கினை துரத்தி தற்போது கே.கே.ஆர் அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் அஜின்க்யா ரஹானே தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை அட்டகாசமாக ஆரம்பித்த அவர் அதற்கடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது அவரது பேட்டிங் பார்ம் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கொல்கத்தா அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் வேளையில் மறுபுறம் ரஹானேவின் பார்ம் மோசமாக இருந்து வருகிறது.

கடந்த போட்டியின் போது குஜராத் அணிக்கு எதிராக முதல் பந்தில் டக் அவுட்டான அவர் இந்த போட்டியில் தான் சந்தித்த இரண்டாவது பந்தில் டக் அவுட்டாகியுள்ளார். இன்றைய போட்டியில் ரஹானே டக் அவுட்டானதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு மாபெரும் மோசமான சாதனை பட்டியலில் பார்த்திவ் படேலை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் பாதியில் அந்நியன்.. அப்புறம் அம்பி.. நிலைகுலைந்த ராஜஸ்தான் – கே.கே.ஆர் அணிக்கு பொன்னான வாய்ப்பு

அதாவது ஒட்டு மொத்தமாக இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் துவக்க வீரராக அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் பார்த்திவ் பட்டேல் 11 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் இருந்தார். இவ்வேளையில் இன்றைய போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் அஜின்க்யா ரஹானே துவக்க வீரராக மட்டும் ஐபிஎல் போட்டிகளில் 12 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement