கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுருட்டிய கே.கே.ஆர் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்களையும், ஜெய்ஸ்வால் 39 ரன்களையும் குவித்தனர். கொல்கத்தா அணி சார்பாக கார்த்திக் தியாகி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதற்கடுத்து தற்போது 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 10 ஓவர்களில் அதிரடியான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 95 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
ஆனால் போட்டியின் இரண்டாம் பாதியில் அவர்கள் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அடுத்த 10 ஓவர்களில் வெறும் 60 ரன்களை மட்டுமே குவித்து 8 விக்கெட்டுகளை இழந்தனர். இப்படி முதல் பாதியில் அவர்கள் 95 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த போது கிட்டத்தட்ட அவர்கள் 220 ரன்களுக்கு மேல் குவிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் கொல்கத்தா அணி அவர்களை மிகச் சிறப்பாக தடுத்து நிறுத்தி 160 ரன்களுக்குள் சுருட்டியது.
இதையும் படிங்க : அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி – விவரம் இதோ
இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை தங்களது வெற்றி கணக்கை துவங்காத கொல்கத்தா அணிக்கு இந்த போட்டியில் வெற்றிபெற ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியிலாவது கொல்கத்தா அணி வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது வெற்றி கணக்கை துவங்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



