ஐபிஎல் 2023 : பும்ரா இல்லைனாலும் அவர துருப்பு சீட்டா பயன்படுத்தி ரோஹித் 6வது கோப்பை ஜெயிப்பாரு – கவாஸ்கர் நம்பிக்கை

Sunil Gavaskar
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடம் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. ஏனெனில் கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 6 போட்டிகளில் தோற்ற அணியாக மோசமான சாதனை படைத்த அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து முதல் முறையாக புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தைப் படித்து மிகப்பெரிய அவமானத்தை சந்தித்தது.

Jasprith Bumrah

அதனால் துவண்டு கிடக்கும் அந்த அணி ரசிகர்களுக்கு இம்முறை சிறப்பாக செயல்பட்டு 6வது கோப்பையை வென்று கொடுத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய கடமை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ளது ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை மும்பையின் பக்கம் கொண்டு வரக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படும் அவர் கடந்த 2022 ஜூலை மாதம் சந்தித்த காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

கவாஸ்கர் நம்பிக்கை:
ஆரம்பத்தில் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் நேரடியாக 2023 உலகக்கோப்பையில் தான் களமிறங்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பும்ரா இல்லாவிட்டாலும் இங்கிலாந்தின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை கருப்பு குதிரையாக பயன்படுத்தி ரோகித் சர்மா மேஜிக் கேப்டன்ஷிப் செய்து இம்முறை 6வது கோப்பையை மும்பைக்கு வென்று கொடுப்பார் என்று நம்புவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒரு வருடமாக காயத்தால் தடுமாறிய அவரை கடந்த வருடம் பங்கேற்க மாட்டார் என்று தெரிந்தும் விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் மும்பை நிர்வாகம் 8 கோடி இலவச சம்பளம் கொடுத்து வாங்கியது.

Jasprith Bumrah Jofra Archer

அந்த நிலையில் 2022 டி20 உலகக்கோப்பை வரை விளையாடாத அவர் ஒரு வழியாக குணமடைந்து கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்துக்காக விளையாடி வருகிறார். எனவே அவர் மும்பை அணியில் கருப்பு குதிரையாக செயல்படுவார் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் சுழல் பந்து வீச்சு துறை மட்டும் பலவீனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்ருமாறு. “ஜோப்ரா ஆர்ச்சர் நிச்சயமாக ஒரு துருப்பு சீட்டாக இருப்பார். சமீபத்தில் இரட்டை சதமடித்த இஷான் கிசானையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். எனவே அவர்களைப் பயன்படுத்தி ரோகித் சர்மா இந்த சீசனில் ஏதேனும் ஸ்பெஷலை நிகழ்த்துவார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஜோப்ரா ஆர்ச்சர் இம்முறை இருப்பது அவர்களுடைய மிகப்பெரிய பலம் என்று கருதுகிறேன். அவர் ஆரம்பத்திலேயே சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கடைசி நேரத்தில் ரன்களை விடாமல் போட்டியை மாற்றக்கூடிய விக்கெட்டுகளையும் எடுக்கும் திறமை பெற்றவர். இருப்பினும் மும்பை அணியின் சுழல் பந்து வீச்சு கூட்டணி பலவீனமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும் அவர்களுடைய புதிய வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும் நிலையில் சுழல் பந்து வீச்சு துறை சற்று லேசாக இருக்கிறது”

Gavaskar

“எனவே கடந்த சீசனில் என்ன நடந்தது என்பதை மறந்து விட்டு இந்த சீசனில் கோப்பையை வெல்லும் அணி தங்களிடம் இருப்பதாக மும்பை நம்ப வேண்டும். அவர்களிடம் பும்ரா இல்லாமல் இருந்தாலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அளவுக்கு நல்ல அணி இருக்கிறது. மேலும் கடந்த வருடம் சந்தித்த தோல்வியால் இந்த வருடம் தங்களை நிரூபிக்க வேண்டிய அவர்கள் புள்ளி பட்டியலில் டாப் 3 இடத்தில் இருப்பதை பார்க்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:கிரிக்கெட்டின் அந்த மோசமான விதிமுறையை தூக்குங்க, சொதப்பல் தோல்வியால் புலம்பும் ஆண்டர்சன் – கலாய்க்கும் ரசிகர்கள்

முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் 17.5 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருப்பதும் மும்பை அணியில் பும்ரா இல்லாத குறையை சரி செய்யும் என்று நம்பலாம்.

Advertisement