இந்திய அணியின் வீரர்களான இவர்கள் இருவரே எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்தனர் – ஜோ ரூட் வருத்தம்

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் குவிக்க அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 365 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் : இந்த தொடரின் முதல் போட்டி எங்களுக்கு பாசிட்டிவாக அமைந்தது. அதன்பிறகு மூன்று போட்டியிலும் எங்களால் இந்திய அணிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த தொடரில் நிறைய விடயங்களை கற்று கொண்டோம். மேலும் இது ஒரு சிறந்த அனுபவமாக இந்த தொடரில் எங்களுக்கு கிடைத்தது.

இதை வைத்து நாங்கள் அடுத்த தொடருக்கு முன்னேறுவோம் என்று நினைக்கிறேன். இந்திய அணி சில முக்கிய இடங்களில் தங்கள் ஆக்கிரமிப்பை அமைத்து போட்டியில் சிறப்பாக முன்னேறியது. குறிப்பாக வாஷிங்டன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேவையான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே போன்று நாங்கள் ரன் குவிக்க தவறிவிட்டோம்.

இந்திய அணி மொத்தத்தில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள். இந்திய மண்ணில் சிறப்பான ஒரு டெஸ்ட் தொடரை நாங்கள் விளையாடி உள்ளோம். அது எங்களுக்கு மோசமாக அமைந்தாலும் இனிவரும் சூழ்நிலைகளில் வருங்காலத்தில் நாங்கள் சிறப்பாக விளையாட உதவும்.

ind

இந்த தொடரில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் கொடுக்கப்பட்ட ஓய்வு எங்கள் அணிக்கு அவசியமானது. இங்கு எங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அன்பு சிறப்பாக அமைந்தது என ரூட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement