இந்திய அணியிடம் நாங்கள் அடைந்த இந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – புலம்பிய ஜோ ரூட்

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

rohith

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து இந்திய அணியுடனான தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது : இந்த வெற்றிக்கு இந்திய அணி முழு தகுதியான அணி ஆகும். பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலுமே அவர்கள் எங்களை விட சிறப்பாகவே செயல்பட்டனர். இந்திய அணியிடம் நாங்கள் அடைந்த இந்த தோல்வி எங்கள் அணிக்கு கிடைத்த நல்லதொரு பாடம்.

இதுபோன்ற ஆடுகளங்களில் நமக்கு அதிகமான விடயங்கள் கற்றுக் கொள்ள கிடைக்கும். மேலும் எங்களது அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஒவ்வொரு ஓவரிலும் இந்திய அணியின் பவுலர்கள் தொல்லை கொடுக்கும் விதத்தில் பந்து வீசினர். அந்த விடயத்தை நாங்கள் இந்திய அணியிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறோம். இந்த போட்டியின் முதல் நாளில் எங்களது கையே ஓங்கி இருந்தது.

axar 1

ஆனால் இரண்டாவது நாளில் பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இல்லை. இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்கள் அணியை வீழ்த்திவிட்டனர். 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளதால் அடுத்த போட்டிக்கான ஆவல் அதிகரித்துள்ளது, அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறோம். மேலும் அடுத்த போட்டியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் களமிறங்குவது குறித்து ஆலோசிப்போம். தவறுகள் எங்கே நடந்தது என்பதை கண்டறிந்து விரைவில் அதை சரி செய்து கொள்வோம் என்று கூறினார்.

Ashwin

ஏற்கனவே சென்னை ஆடுகளம் முற்றிலும் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றும், இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாட முடியாது என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதேபோன்று பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் வீரர்களை கட்டுக்குள் வைத்ததால் இந்த வெற்றி இந்திய அணிக்கு சாத்தியமானது குறிப்பிடத்தக்கது.

Advertisement