
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 427 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 196 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 281 ரன்கள் குவித்தது.
இதன் காரணமாக தற்போது இலங்கை அணி 483 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக விளையாடிய அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோ ரூட் இதுவரை இங்கிலாந்து வீரர்கள் யாரும் படைக்காத ஒரு சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் அடித்த ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 103 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய அவர் அதுமட்டும் இன்றி சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 50 சதங்களை விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விராட் கோலி – ரெய்னா இல்லை.. அந்த இந்திய வீரர் தான் உலகின் சிறந்த ஃபீல்டர்.. ஜான்டி ரோட்ஸ் பாராட்டு
அதோடு தற்போது 33 வயதாகும் ஜோ ரூட் சச்சினின் சாதனையை நெருங்கக் கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.