இவர்களோட முடிவு ஒருதலையாக இருந்தது. போட்டி முடிந்து அம்பயர்களின் செயல் குறித்து – ஜோ ரூட் குற்றசாட்டு

Root
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி பகல்-இரவு டெஸ்ட்-ஆக சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா பத்து விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ind

- Advertisement -

பிறகு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. முதலில் நன்றாக ஆடிகொண்டிருந்த சுப்மன் கில் ஒரு ஓவரில் வீசப்பட்ட பந்து அவரது பேட்டில் எட்ஜாகி விட , அந்த பந்து ஸ்டோக்ஸ் பக்கம் சென்றது. அதை ஸ்டோக்ஸ் சரியாக பிடிக்காமல் தரையில் படும்படி கேட்ச் பிடித்தார். இதனை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர் வழக்கத்திற்கு மாறாக ஆன் ஃபீல்டு அம்பயரின் ஃசாப்ட் சிக்னலுக்கு மாறாக விரைவில் முடிவை மாற்றி அறிவித்தார்.

அதேபோல் ரோகித்தை ஸ்டம்பிங் செய்யும் முயற்சியில் இங்கிலாந்து அணி ஈடுபட்டபோது, அதனை ஆய்வு செய்த மூன்றாவது அம்பையர் பல கோணங்களில் பார்க்காமல் ஒரே கோணத்தில் பார்த்து சட்டென முடிவை உடனடியாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணி கடும் அதிருப்தியையும் கோபமும் அடைந்தது. போட்டி முடிந்த பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும், அணியின் பயிற்சியளாரும் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம இது குறித்து நீண்டநேரம் பேசினர்.

மேலும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி, “நாங்கள் பேட் செய்தபோது, ஜாக் லீச் பேட்டில் பட்டுச் சென்ற பந்து புஜாரிவிடம் சரியாக கேட்ச்சாகவில்லை. அதை மட்டும் மூன்றாம் நடுவ் வெவ்வேறு கோணங்களில் நீண்ட நேரம் பார்த்தார். நாங்கள் ஃபீல்டிங் செய்யும்போது மட்டும் மூன்றாம் நடுவர் ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே பார்த்தார். அதுதான் எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

kohli

மேலும் அவர்கள் உண்மையிலேயே அவுட்டா – இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது.அவர்களுக்கு பார்த்தது போல வெவ்வேறு கோணங்களில் மூன்றாம் நடுவர் எங்களுக்கும் ஆய்வு செய்யப்படாமல் விட்டது மிக தவறாக நான் பார்க்கிறேன். ஒருதலையாக இப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என்றும் பதிலளித்தார்.

Advertisement