13 வருட தவம்.. ஹைடன் மானத்தைக் காப்பாற்றிய ஜோ ரூட்.. காபாவில் 88 வருடம் கழித்து இங்கிலாந்துக்காக சாதனை

Joe Root
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்ததாக இரண்டாவது போட்டி டிசம்பர் 4ஆம் தேதி காபாவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட்டை கோல்டன் டக் அவுட்டாக்கிய மிட்சேல் ஸ்டார்க் அடுத்து வந்த ஓலி போப்பையும் டக் அவுட்டாக்கினார். அதனால் 5/2 என தடுமாறிய இங்கிலாந்துக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நங்கூரமாக விளையாடி சவாலைக் கொடுத்தார்.

- Advertisement -

ஆஸியில் 13 வருட தவம்:

அவருடன் சேர்ந்து மறுபுறம் நங்கூரமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 76 ரன்களை குவித்த போது விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜோ ரூட் அரை சதத்தை அடித்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். எதிர்ப்புறம் வந்த ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாட முயற்சித்து 31 ரன்னில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்ட்ரோக்ஸ் நிதானமாக விளையாட முயற்சித்த போது தவறான புரிதலால் 19 ரன்களில் ரன் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுத்த ஜோ ரூட் தன்னுடைய 40வது சதத்தை அடித்து அசத்தினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்துள்ள அவர் தம்முடைய 13 வருட கேரியரில் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை கூட சதம் அடித்ததில்லை.

- Advertisement -

காப்பாற்றப்பட்ட ஹைடன் மானம்:

அதனால் விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை சந்தித்த வந்த ஜோ ரூட் ஒருவேளை இம்முறை ஆஸ்திரேலியாவில் சதமடிக்கத் தவறினால் மெல்போர்னில் நடைபெறும் 3வது போட்டியில் நிர்வாணமாக மைதானத்தில் உலா வருவேன் என்று மேத்தியூ ஹைடன் சபதம் எடுத்தார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் சதமடித்த ரூட் அவருடைய மானத்தைக் காப்பாற்றியுள்ளார் என்றே சொல்லலாம். அத்துடன் 88 வருடங்களுக்குப் பின் காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே சதத்தை அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் ரூட் படைத்தார்.

இதையும் படிங்க: வயசை பத்தி யோசிக்காம அவங்க 2 பேரையும் வேர்ல்டுகப்புக்கு செலக்ட் பண்ணுங்க – டிம் சவுதி கருத்து

இதற்கு முன் 1936/37 ஆஷஸ் தொடரில் காபா போட்டியில் முதல் நாளிலேயே இங்கிலாந்துக்காக மௌரிஸ் லைலாண்ட் 126 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஜேமி ஸ்மித் 0, வில் ஜேக்ஸ் 19, கஸ் அட்கின்ஷன் 4, பிரைடன் கார்ஸ் 0 ரன்களில் அவுட்டானார். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடியதால் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 325/9 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் ரூட் 135*, ஆர்ச்சர் 32* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement