இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுமான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரில் அற்புதமாக விளையாடிய அவர்கள் இருவரும் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறனர்.
வயசை பாக்காம அவங்க 2 பேரையும் தேர்வு செய்யுங்க : டிம் சவுதி
இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியிலுமே விராட் கோலி அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தியுள்ளார். அதேபோன்று ரோகித் சர்மாவும் அதிரடியான துவக்கத்தை அளித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர்கள் தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் நீடிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்திய அணியின் நிர்வாகம் அவர்களது வயதை கணக்கில் காட்டியும், ஒரு வகையான கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே ஆடுவதால் அடுத்த 2027 உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யலாமா? வேண்டாமா? என்கிற ஆலோசனையை எல்லாம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நிர்வாகம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து எந்தவித கருத்தையும் யோசிக்காமல் அவர்களை அடுத்த 2027 உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யலாம் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான டிம் சவுதி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இனியும் நிரூபிக்க வேண்டியது எதுவும் இல்லை.
அந்த அளவிற்கு அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். தற்போதும் அவர்கள் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இன்றளவும் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். அதேபோன்று ரோஹித் சர்மாவும் அட்டகாசமான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : இதுபோதும் இனிமே தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஒன் டே டீம்ல சேன்ஸ் தாங்க – சீக்கா ஆதரவு
எனவே அவர்களின் வயதை கணக்கில் கொள்ளாமல் 2027 உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும். என்னை பொறுத்த வரை வயது என்பது ஒரு நம்பர் மட்டும் தான். ஆனால் அதையும் தாண்டி அவர்கள் இருவரும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என டிம் சவுதி கூறியது குறிப்பிடத்தக்கது.



