இதுபோதும் இனிமே தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஒன் டே டீம்ல சேன்ஸ் தாங்க – சீக்கா ஆதரவு

Srikkanth and Ruturaj
- Advertisement -

சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் உள்நாட்டு தொடர்களில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அவருக்கு ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போதைய தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது.

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு தொடர்ந்து சேன்ஸ் தாங்க : சீக்கா ஸ்ரீகாந்த்

அந்தவகையில் தற்போது தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் சோபிக்க தவறிய அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது சதம் அடித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக நான்காவது வீரராக களமிறங்கிய அவர் 83 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 105 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி மூன்றாவது விக்கெட்டிற்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியிருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நேரத்தில் அவர் அந்த இடத்தில் விளையாடிய இந்த ஆட்டம் பலராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒருநாள் போட்டிகளில் இனி ருதுராஜ் கெய்க்வாடுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் பவுன்சர் பந்தை எதிர் கொண்டாலும் அதன் பிறகு விராட் கோலியுடன் இணைந்து அற்புதமாக விளையாடினார்.

- Advertisement -

விராட் கோலி அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நிறைய அறிவுரைகளை வழங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். அந்த வகையிலேயே சரியான ஷாட்டுகள் மூலம் ருதுராஜ் ரன்களை கொண்டு வந்தார். அதிலும் குறிப்பாக அவர் ரன் அடித்ததே தெரியாத அளவிற்கு வேகமாக ரன்களை குவித்தார். இதன்மூலம் அவர் இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு வீரர் என்பதை நிரூபித்து விட்டார்.

இதையும் படிங்க : வருண் சக்ரவர்த்தியை ட்ரை பண்ணியே ஆகனும்.. மோசமான தோல்விக்கு பின் – ஹர்பஜன் சிங் கருத்து

எனவே அவரை நிச்சயம் இனிவரும் தொடர்களிலும் தேர்வு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரஞ்சி டிராபி உள்ளிட்ட அனைத்து போட்டியிலுமே அவர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அவரால் எவ்விதமான போட்டிகளிலும் விளையாட முடியும் என்றும் நிரூபித்துள்ளார் என ஸ்ரீகாந்த் ருதுராஜ் கெய்க்வாடை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement