131 டெஸ்ட் போட்டியில் விளையாடி ஜோ ரூட் இப்படி அவுட் ஆவுறது இதுதான் முதல் முறையாம் – வியக்க வைக்கும் சாதனை

Joe-Root-1
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் கடந்த 16-ஆம் தேதி துவங்கியது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியின் 5ஆம் நாளான இன்று அனைவரும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

Root

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி நட்சத்திர ஆட்டக்காரருமான ஜோ ரூட் விசித்திரமான ஒரு சாதனையை படைத்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஜோ ரூட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் போது 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் 164 ரன்கள் குவித்துள்ளார்.

Joe Root

இப்படி அவர் அடித்த இந்த 164 ரன்கள் மூலம் அவருக்கு சாதனை வரவில்லை. மாறாக அவர் படைத்த அந்த விசித்திரமான சாதனை யாதெனில் : இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு முன்னர் வரை அவர் 130 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார், அதில் 11,004 ரன்களையும் குவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2012-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 11 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த போட்டியில் அடித்த 164 ரன்களுடன் சேர்த்து 131 டெஸ்ட் போட்டிகளில் 11,168 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : களத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட இங்கிலாந்து பவுலர். முன்னாள் வீரர்கள் மற்றுமின்றி ரசிகர்களும் கண்டனம் – என்ன நடந்தது?

இப்படி 131 டெஸ்ட் போட்டியில் விளையாடி 11,168 ரன்கள் எடுத்துள்ள ஜோ ரூட் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்தார். இதுதான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் ஆவது முதல் முறையாம். உங்களால் நம்பமுடியவில்லை என்றாலும் இதுவே உண்மை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும், 131 போட்டியில் பங்கேற்றும் இப்படி முதல் முறையாக ஸ்டம்பிங் ஆகி விசித்திரமான சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement