களத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட இங்கிலாந்து பவுலர். முன்னாள் வீரர்கள் மற்றுமின்றி ரசிகர்களும் கண்டனம் – என்ன நடந்தது?

Robinson
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூன் 16-ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளான இன்று 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமே மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படும் இந்த ஆஷஸ் தொடர் போட்டிகளானது தற்போது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 393 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளேர் செய்து அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது அவர்களின் எண்ணத்தை உடைத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தங்களது முதல் இன்னிங்சில் 386 ரன்களை குவித்து ஏழு ரன்கள் மட்டுமே பின் தங்கியது.

- Advertisement -

இப்படி அதிரடியாக நடைபெற்று வரும் இந்த ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறிய போது துவக்க வீரரான கவாஜா பின்வரிசையில் வந்த அனைத்து வீரர்களுடன் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றினார்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் கவாஜா 321 பந்துகளை சந்தித்து 141 ரன்களை குவித்து இறுதியாக ராபின்சன் வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார். இப்படி அவர் விக்கெட்டான பிறகு அடுத்த 14 ரன்களிலேயே ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்க்ஸை முடித்துக் கொண்டது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி கவாஜா ஆட்டம் இழந்த பிறகு அவரை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ராபின்சன் அந்த விக்கெட்டை கொண்டாடிய விதம் தான் தற்போது அனைவரது மத்தியிலும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ராபின்சன் விக்கெட்டை வீழ்த்திய பிறகு உணர்ச்சிவச பெருக்கில் பல்வேறு மோசமான வார்த்தைகளை தொடர்ந்து கவாஜாவிற்கு எதிராக பயன்படுத்தி அவரை வழியனுப்பினார்.

இதையும் படிங்க : எப்டி விளையாடுறோம் என்பது முக்கியமல்ல, எம்எஸ் தோனி பாதையில் மிரட்டும் இங்கிலாந்துக்கு – ஏபிடி பாராட்டு

இதனை கண்ட வர்ணனையாளர்களும் சரி, முன்னாள் வீரர்களும் சரி களத்தில் இதுபோன்று மற்றொரு வீரரை மோசமாக பேசக்கூடாது. ஒரு பவுலராக நீங்கள் ஆக்ரோஷமாக விக்கெட்டை கொண்டாடலாம் ஆனால் இப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்று தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோன்று இதனை கண்ட ரசிகர்களும் இதுபோன்ற செயலை கிரிக்கெட்டில் அனுமதிக்க கூடாது என்றும் கடும் கோபத்தினை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement