எப்டி விளையாடுறோம் என்பது முக்கியமல்ல, எம்எஸ் தோனி பாதையில் மிரட்டும் இங்கிலாந்துக்கு – ஏபிடி பாராட்டு

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் தொடரில் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக விளையாடி 393/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 118* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கி ஆஸ்திரேலியா சதமடித்து 141 ரன்கள் குவித்த உதவியுடன் 386 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதன் பின் 7 ரன்கள் முன்னிலுடன் களமிறங்கிய இங்கிலாந்து ஹரி ப்ரூக், ஜோ ரூட் தலா 46 ரன்கள் எடுத்த உதவியுடன் 273 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 281 ரன்களை துரத்தி வரும் ஆஸ்திரேலியா சற்று முன் வரை 143/5 என தடுமாறி வருவதால் இந்த போட்டியில் இங்கிலாந்து வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஜோ ரூட் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்துக்கு அதிரடியை விரும்பக்கூடிய பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டனர்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:
அவர்களது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து சொந்த மண்ணில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகள் பெற்றது. இருப்பினும் வெளிநாட்டு மைதானங்களில் இந்த ஆட்டம் செல்லுபடியாகாது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தில் அதே அணுகுமுறையுடன் விளையாடி வெற்றி கண்ட இங்கிலாந்து இந்த போட்டியில் முதல் நாளிலேயே 393/8 ரன்கள் குவித்து டிக்ளர் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

அத்துடன் கவாஜா சதமடித்து சவாலை கொடுத்த போது நேராக இருபுறங்களிலும் 3 ஃபீல்டர்களை வைத்து அவுட்டாக்கிய பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங் அனைவரையும் பாராட்ட வைத்தது. அது போக கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய ஜோ ரூட் 0 ரன்களில் இருந்தும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் ஸ்கூப் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடித்தது மற்றொரு வியப்பாக அமைந்தது. மொத்தத்தில் பஸ்பால் என்று ரசிகர்கள் கொண்டாடும் இங்கிலாந்தின் புதிய அணுகுமுறை நூற்றாண்டு பழமை வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தையும் வரலாறு காணாத ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் எந்த மாதிரியான அணியை வைத்து எப்படி விளையாடுகிறோம் என்பதை விட வெற்றிக்காக விளையாடுகிறோம் என்ற இங்கிலாந்தின் புதிய அணுகுமுறை பாராட்டுக்குரியது என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக இருக்கும் வீரர்களை வைத்து சூழ்நிலைகளுக்கு விரைவாக உட்பட்டு 2023 ஐபிஎல் கோப்பை வென்ற எம்எஸ் தோனியின் பாதையை போலவே இங்கிலாந்து நடந்து கொள்வதாக பாராட்டும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“இந்த போட்டியில் பர்மிங்கம் வானிலையை நான் எப்போதும் பார்க்கவில்லை. ஆனால் இங்கிலாந்து விளையாடிய விதம் தற்போது அதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறது. அதை நீங்கள் பஸ்பால் என எந்த பெயரில் அழைத்தாலும் இது தான் சாதுரியமான கிரிக்கெட் என்று நினைக்கிறேன். எப்போதுமே சிறந்த அணிகள் சூழ்நிலைகளுக்கேற்றார் போல தங்களை மாற்றி அமைத்து விளையாட தயாராக இருக்க வேண்டும். அதுதான் இதர அணிகளை விட அந்த அணிகளை வெற்றி நிலைக்கு தள்ளும்”

- Advertisement -

“அது தைரியமான டிக்ளர் முடிவின் வாயிலாகவோ அல்லது ரிவர்ஸ் ஸ்கூப் செய்யும் பேட்டிங்கை வெளிப்படுத்துவதாக உட்பட எதுவாக இருந்தாலும் சரி. ஈகோ இல்லாமல் சாதனைக்காக விளையாடாத வீரர்களை வைத்து உலகின் சிறந்த அணியை உருவாக்கி தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே அதற்கான வழியாகும்”

இதையும் படிங்க:தோனி சார்.. எனக்காக இந்தியாவில் இருந்து நீங்கள் அனுப்பிய கிஃப்ட்க்கு நன்றி – புகைப்படத்தை பகிர்ந்த குர்பாஸ்

“அந்த வழியில் இங்கிலாந்து விளையாடுவதை நான் பார்க்கிறேன். அதை நான் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி மற்றும் அவருடைய அணியில் பார்த்தேன். அது போகட்டும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி பெற சாத்தியமில்லை ஆனால் சாத்தியம்” என்று கூறினார்.

Advertisement