தோனி சார்.. எனக்காக இந்தியாவில் இருந்து நீங்கள் அனுப்பிய கிஃப்ட்க்கு நன்றி – புகைப்படத்தை பகிர்ந்த குர்பாஸ்

Gurbaz
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. இந்த தொடர் முழுவதுமே தோனியை காண இந்தியா முழுவதும் ரசிகர்கள் காத்திருந்ததால் சிஎஸ்கே எங்கு சென்றாலும் மஞ்சள் நிறமாக அரங்கமே அதிர்ந்தது.

அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் தோனிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. அதையும் தாண்டி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பல வீரர்களுக்கு முன்மாதிரியாக தோனி திகழ்கிறார்.

- Advertisement -

மேலும் ஒவ்வொரு போட்டி முடிந்தும் இளம் வீரர்கள் அவரிடம் சென்று அறிவுறுகளை கேட்பதையும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக விளையாட அந்த அணியில் இடம் பிடித்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் இம்முறை டிரேடிங் முறையில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கி விளையாடினார்.

இந்த ஆண்டு 11 போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய குர்பாஸ் 227 ரன்களை 133 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து அசத்தினார். 21 வயதாகும் இளம் வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடப்பு சீசனில் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் நிச்சயம் அவர் எதிர்வரும் சீசன்களில் கொல்கத்தா அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான அவர் ஏற்கனவே ஐபிஎல் போட்டியின் போது தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க : வீடியோ : யாரு சாமி நீ? 117 ரன்கள் 4 விக்கெட்கள், கடைசி ஓவரில் மேஜிக் நிகழ்த்தி – ருதுராஜ் அணியை சாய்த்த 18 வயது இளம் வீரர்

இவ்வேளையில் தற்போது தோனி கையொப்பமிட்ட ஒரு ஜெர்சியினை பரிசாக பெற்றுள்ளார். அதிலும் இந்தியாவிலிருந்து தனக்கு பார்சலில் வந்த அந்த ஜெர்சியை புகைப்படம் எடுத்த அவர் “தேங்க்யூ தோனி சார்”, “இந்தியாவிலிருந்து நீங்கள் எனக்கு இந்த பரிசை அனுப்பியதில் மிகவும் மகிழ்ச்சி” என அந்த புகைப்படத்தை பகிர்ந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Advertisement