- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்திய மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோ ரூட் – விவரம் இதோ

இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் தற்போது இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட் :

அந்த வகையில் நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் தேவை என்கிற நிலையில் போட்டியின் நான்காம் நாளன்று அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் இங்கிலாந்து அணியின் கையே ஓங்கியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான ஜோ ரூட் 152 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்தியுள்ள சாதனை ஒன்றினையும் அவர் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் ஜோ ரூட் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரராக ஸ்டீல் ஸ்மித் 16 சதத்துடன் முதலிடத்தில் உள்ளார். அவரது இந்த சாதனையை தற்போது ஜோ ரூட் சமன் செய்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக ஜோ ரூட் 13 டெஸ்ட் சதம் மற்றும் 3 ஒருநாள் சதம் என 16 சதங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : அவரை யூஸ் பண்ணிருந்தா ஹாரி ப்ரூக்கை முன்னாடியே அவுட்டாக்கிருக்கலாம்.. கில், கம்பீர் தவறை சாடிய அஸ்வின்

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் 13000 ரன்களை கடந்துள்ள ஜோ ரூட் இன்னும் சில ஆண்டுகள் இதேபோன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினால் சச்சினின் சாதனையையும் அவர் முறியடிப்பார் என்று பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -