டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிடின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோ ரூட் – விவரம் இதோ

Root and Dravid
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இங்கிலாந்து அணி பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 471 ரன்களை குவித்தது.

ராகுல் டிராவிடின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட் :

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்களை குவிக்கவே 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 364 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக விளையாடி வரும் நட்சத்திர வீரரான ஜோ ரூட் முன்னாள் இந்திய ஜாம்பவானான ராகுல் டிராவிடன் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஜோ ரூட் செய்த சாதனை யாதெனில் :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 210 கேட்ச்களை பிடித்துள்ளார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் பிடித்த அதிகபட்ச கேட்ச் எண்ணிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு கேட்சை பிடித்த ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷர்துல் தாகூரின் ஒரு கேட்டினை பிடித்திருந்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 153 ஆட்டங்களில் விளையாடி 210 கேட்ச்களை பிடித்து ராகுல் டிராவிடின் அந்த மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : கில் தலைமையில் இந்தியா இந்த 2 விஷயத்தை கரெக்ட்டா செஞ்சா தான் வின்னர்.. ஸ்டுவர்ட் ப்ராட் பேட்டி

தற்போது 34 வயதான ஜோ ரூட் இன்னும் குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் வரை விளையாடுவார் என்பதனால் இனிவரும் ஆண்டுகளில் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் ராகுல் டிராவிடின் அந்த சாதனையை எளிதில் முறியடிப்பார் என்பது உறுதி. அதிலும் குறிப்பாக இந்த தொடரிலேயே இந்திய அணிக்கு எதிராக 4 போட்டிகள் எஞ்சியிருப்பதால் இந்த தொடரிலேயே அவர் டிராவிடின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement