இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸ் நகரில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை 365 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 6 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள்.
வெல்லப்போவது யார்:
இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய இந்தியா 364 ரன்கள் எடுத்த போதிலும் நன்றாக ஃபினிஷிங் செய்யத் தவறியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 137, ரிஷப் பண்ட் 118 ரன்களை எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங், பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இறுதியில் சேசிங் செய்யும் இங்கிலாந்துக்கு கடைசி நாளில் 350 ரன்கள் தேவைப்படுகிறது. பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டுள்ள இங்கிலாந்தின் கைவசம் 10 விக்கெட் இருப்பதால் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடைசி நாளில் இந்தியா நன்றாக பவுலிங் செய்து கேட்சுகளை பிடித்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் கூறியுள்ளார்.
ப்ராட் கணிப்பு:
அதற்கு சுப்மன் கில் தம்முடைய பவுலர்களை சரியாக பயன்படுத்துவது அவசியம் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “புதிய பந்தில் பவுலிங் செய்யப்படும் சூழ்நிலைகளை கடப்பது இங்கிலாந்தின் வெற்றிக்கு சாவியாக இருக்கும். 5வது நாள் பிட்ச்சில் இந்தியா வெற்றியைப் பெறக்கூடிய அணியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க: 371 ரன்ஸ் தானே.. இந்தியாவை அடிச்சு இங்கிலாந்து ஜெய்க்கும்.. காரணம் இது தான்.. ஜோஸ் எச்சரிக்கை
“அவர்கள் வெற்றியைப் பெறுவதற்கு 10 வாய்ப்புகளை மட்டும் உருவாக்க வேண்டும். அத்துடன் அவர்கள் கேட்சுகளை பிடிக்க வேண்டும். என்னைக் கேட்டால் அவர்கள் வெற்றி பெறக்கூடிய அணியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து தங்களைத் தாங்களே வெற்றி பெறும் அணியாக அணிக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள். சுப்மன் கில் தம்முடைய பவுலர்களை நன்றாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். இந்திய பவுலர்கள் முடிந்தளவுக்கு பிட்ச்சில் பந்தை கடினமாக அடிக்க வேண்டும்” என்று கூறினார்.



