371 ரன்ஸ் தானே.. இந்தியாவை அடிச்சு இங்கிலாந்து ஜெய்க்கும்.. காரணம் இது தான்.. ஜோஸ் எச்சரிக்கை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 465 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாகப் பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

371 ரன்ஸ் இலக்கு:

அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 364 ரன்கள் எடுத்த போதிலும் நன்றாக ஃபினிஷிங் செய்யத் தவறியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 137, ரிஷப் பண்ட் 118 ரன்களை எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங், பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடும் இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 21/0 ரன்களை எடுத்துள்ளது.

கைவசம் 10 விக்கெட்களை வைத்துள்ள அந்த அணிக்கு இன்னும் 350 ரன்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ள தங்களுடைய அணி 371 ரன்களை எளிதாக சேசிங் செய்து இந்தியாவை தோற்கடிக்கும் என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் டாங் தெரிவித்துள்ளார். ஏனெனில் சொந்த மண்ணில் இந்தியாவை அடித்து நொறுக்கும் பேட்டிங் வரிசை தங்களிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்கு எச்சரிக்கை

எனவே தோல்வியை சந்திப்பதற்கு காரணமே இல்லை என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாளை (இன்று) சேசிங் செய்ய செல்லுங்கள் என்பது தான் எங்களுடைய அணியின் உடைமாற்றும் அறையில் கொடுக்கப்பட்டுள்ள மெசேஜ். நாங்கள் சேசிங் செய்யாமல் தோல்வியை சந்திப்பதற்கு எந்த காரணமும் இல்லை”

இதையும் படிங்க: புதிய தலைமுறை இந்திய அணி நிகழ்த்திய வரலாற்று சாதனை.. அதுவும் வெளிநாட்டு மண்ணில்.. – விவரம் இதோ

“அதன் காரணமாக டிராவுக்கு விளையாட வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று நம்புகிறோம். கடைசி நாளின் உணவு இடைவெளியில் நாங்கள் நிலைமையைப் பார்த்து அனைத்தையும் கணக்கிடுவோம். நாங்கள் எந்த இலக்கையும் சேசிங் செய்வோம்” என்று கூறினார். இங்கே 2022 எட்ஜ்பஸ்டன் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து 378 இலக்கை எளிதாக சேசிங் செய்து வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement