புதிய தலைமுறை இந்திய அணி நிகழ்த்திய வரலாற்று சாதனை.. அதுவும் வெளிநாட்டு மண்ணில்.. – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 471 ரன்களை குவித்து அசத்த அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியும் தங்களது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.

இந்திய அணி வீரர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்திய சாதனை :

அதன்படி நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்திலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க தற்போது இங்கிலாந்து அணியானது 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை இங்கிலாந்து அணி குவித்திருந்தது.

- Advertisement -

அதன் காரணமாக போட்டியின் கடைசி நாளான இன்று 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து ஒரு மாபெரும் சாதனையை முதல்முறையாக இந்திய அணிக்காக நிகழ்த்தியுள்ளனர்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி வீரர்கள் படைத்த சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்து அசத்தியிருந்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் துவக்க வீரரான கே.எல் ராகுல் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்திருந்தனர். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் ஐந்து சதங்களை இந்திய வீரர்கள் அடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க : ஒரே போட்டியில் 5.. ஆஸியின் அரிதான 70 வருட உலக சாதனையை சமன் செய்த இந்தியா.. போராடி வெல்லுமா?

இப்படி ஒரே டெஸ்ட் போட்டியில் 5 சதங்களை இந்திய வீரர்கள் அடிப்பது இதுவே முதல்முறை. ஏற்கனவே இந்த சாதனை உலகளவில் ஆறுமுறை நடைபெற்று இருந்தாலும் இந்திய அணி சார்பாக முதல் முறையாக படைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாதனை வெளிநாட்டு மண்ணில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement