- Advertisement -
உலக கிரிக்கெட்

அலைஸ்டர் குக்கின் சாதனையை சமன் செய்த் ஜோ ரூட்.. சச்சினையும் தாண்டி அசத்தப்போறது கன்பார்ம்

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

சச்சினை நெருங்கும் ஜோ ரூட் :

இதன் காரணமாக தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 206 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்திருந்தார்.

- Advertisement -

அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் முன்னாள் இங்கிலாந்து கேப்டனான அலைஸ்டர் குக்கின் மாபெரும் சாதனை ஒன்றினியும் அவர் சமன் செய்துள்ளதோடு சச்சினின் சாதனையும் நெருங்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதனில் : கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜோ ரூட் இதுவரை 144 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,131 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க : என்னது நாங்க ரோஹித் சர்மாவை வாங்கப்போறோமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த – லக்னோ அணியின் ஓனர்

நேற்று அவர் அடித்த சதத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரரான குக்கின் சாதனையையும் சமன் செய்துள்ளார். நேற்று ஜோ ரூட் அடித்த சதம் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 33-வது டெஸ்ட் சதமாக பதிவாகியுள்ளது. அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் அவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -