- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 ஆவது சர்வதேச வீரராக இந்திய அணிக்கு எதிராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ஜோ ரூட் – விவரம் இதோ

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்திய அணிக்கு எதிராக ஜோ ரூட் நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 336 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. இதன் காரணமாக இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

- Advertisement -

அதன் பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஜூலை 10-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது 191 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் ஜோ ரூட் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிச்சயம் சதம் அடிப்பது உறுதி. ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் ஜோ ரூட் இந்த தொடரில் முதல் சதத்தை பதிவு செய்ய காத்திருக்கிறார். அதோடு நேற்று அடித்த இந்த 99 ரன்களின் மூலம் நான்காவது சர்வதேச வீரராக இந்திய அணிக்கு எதிராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஜோ ரூட் நிகழ்த்திய சாதனை யாதெனில் : அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணிக்கு எதிராக ரிக்கி பாண்டிங், ஜெயவர்த்தனே, சங்கக்காரா ஆகிய மூவரும் 4000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இந்நிலையில் இந்த பட்டியலில் இந்திய அணிக்கு எதிராக நான்காவது வீரராக 4000 ரன்களை கடந்து ஜோ ரூட் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணி சாய் சுதர்சனுக்கு செய்தது நியாயமே இல்ல.. தமிழக வீரருக்காக சப்போர்ட் செய்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

இந்திய அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் ரிக்கி பாண்டிங் 4,795 ரன்கள் அடித்து முதலிடத்திலும், அவருக்கு அடுத்து ஜெயவர்த்தனே 4563 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், குமார் சங்கக்காரா 4287 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும் இருக்கும் வேளையில் இந்திய அணிக்கு எதிராக 4000 ரன்களை கடந்த நான்காவது வீரராக நேற்றைய போட்டியின் மூலம் ஜோ ரூட் தனது பெயரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -