அதற்குள் 5000.. தனித்துவ உலக சாதனை பட்டியலில் சச்சினை நெருங்கிய ஜோ ரூட்.. 15921 ரன்ஸ் சாதனை காலியாகுமா?

Joe Root
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் ஏழாம் தேதி முல்தானில் துவங்கியது. அதில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 556 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அப்துல்லா சபிக் 102, கேப்டன் ஷான் மசூத் 151, ஆகா சல்மான் 104* ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக் லீச் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 96-1 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பென் டக்கெட் டக் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் ஜாக் கிராவ்லி 64*, ஜோ ரூட் 32* ரன்களுடன் உள்ளனர். இதே போல பாகிஸ்தானை திருப்பி அடித்து இங்கிலாந்து முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

5 முறை 5000 ரன்கள்:

முன்னதாக இப்போட்டியில் இதுவரை அடித்துள்ள 32 ரன்களையும் சேர்த்து ஜோ ரூட் 2024ஆம் ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் கடந்துள்ளார். இதே போல அவர் ஏற்கனவே தம்முடைய கேரியரில் ஒரு காலண்டர் வருடத்தில் 4 முறை 1000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அதையும் சேர்த்து தம்முடைய கேரியரில் இதுவரை ஜோ ரூட் மொத்தம் 5 வருடங்களில் 1000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 2வது அதிக முறை 1000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். இதற்கு முன் ஜாம்பவான்கள் பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜேக் காலிஸ், குமார் சங்கக்காரா, அலெஸ்டர் குக், மேத்தியூ ஹைடன் ஆகியோரும் தங்களுடைய கேரியரில் அதிகபட்சமாக தலா 5 காலண்டர் வருடங்களில் 1000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளனர்.

- Advertisement -

சச்சினின் சாதனைகள்:

அவர்களுடைய சாதனையை தற்போது ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதே பட்டியலில் முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6 வருடங்களில் 1000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வருடங்களில் 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சச்சின் தன்வசம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இதை வெச்சுகிட்டு உடனே தோனி, கோலியை விட பாண்டியா சிறந்தவர்ன்னு சொல்லாதீங்க.. ஆர்பி சிங் பேட்டி

ஆனால் 33 வயதாகும் ஜோ ரூட் இன்னும் 3 – 4 வருடங்களில் ஏதேனும் 2 வருடத்தில் 1000 ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது. அதை செய்தால் சச்சினின் இந்த சாதனையை உடைத்து ரூட் புதிய உலக சாதனை படைப்பார். அது போக இதுவரை ரூட் 12402* ரன்கள் எடுத்துள்ளார். எனவே இதே வேகத்தில் விளையாடினால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (15921) குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையையும் உடைக்க பிரகாச வாய்ப்புள்ளது.

Advertisement