வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதைத் தொடர்ந்து அக்டோபர் ஒன்பதாம் தேதி தலைநகர் டெல்லியில் இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. முன்னதாக மூன்றாவது போட்டியில் 127 ரன்களை துரத்திய இந்தியா 11.5 ஓவரில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கி எளிதாக வென்றது.
குறிப்பாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 39* (16) ரன்களை விளாசி போட்டியை முடித்தார். அதிலும் குறிப்பாக டஸ்கின் அகமது வீசிய 12வது ஓவரின் 5வது பந்தில் பாண்டியா சிக்ஸரை பறக்க விட்டு அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
பெருசா ஒன்னும் பண்ணல:
இதற்கு முன் விராட் கோலி 4, தோனி 3 போட்டிகளை சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அதனால் விராட் கோலி, தோனியை முந்தி ஹர்திக் பாண்டியா இந்தியாவின் சிறந்த டி20 ஃபினிஷராக உருவெடுத்துள்ளதாக சிலர் பாராட்டினர். இந்நிலையில் வங்கதேசத்துக்கு போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக எளிதாக வென்ற போட்டியை வைத்து தோனி, கோலியை விட பாண்டியா சிறந்த ஃபினிஷர் என்று சொல்வது அர்த்தமில்லை என முன்னாள் வீரர் ஆர்பி சிங் சாடியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வங்கதேசம் போன்ற அணிக்கு எதிராக வெளிப்படுத்திய செயல்பாடை வைத்து ஒரு வீரரின் ஃபார்மை மதிப்பிடுவது சரியல்ல என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்சமயத்தில் வங்கதேசம் உச்சகட்ட தரத்திற்கு நிகராக விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா தம்மால் முடிந்த விஷயத்தை சிறப்பாக செய்தார்”
ஈஸியான ஃபினிசிங்:
“ஆனால் வங்கதேசத்துக்கு எதிராக வெளிப்படுத்திய இந்த செயல்பாட்டை அளவுகோலாக பயன்படுத்துவது சரியல்ல என்பது என்னுடைய கருதது. வேண்டுமானால் இன்னும் சிறந்த அணிக்கு எதிராக அல்லது சிறந்த தொடரில் கணக்கிடலாம். ஏனெனில் அந்த போட்டியில் சேசிங் செய்ய பெரிய ரன்கள் இல்லாததால் பல தருணங்களில் நீங்கள் சுதந்திரமாக இருந்ததாக உணர்ந்தீர்கள்”
இதையும் படிங்க: ஏற்கனவே செஞ்சுருக்காங்க.. இந்தியாவிடம் அந்த டபுள் ஃபயர்பவர் இருக்கு.. ஆஸியை எச்சரித்த ஷேன் வாட்சன்
“அதே போல ஹர்திக் பாண்டியா போராடி ஃபினிஷிங் செய்ய வேண்டிய சூழ்நிலையை வங்கதேசமும் உருவாக்கவில்லை. இருப்பினும் கடந்த காலங்களில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை முழுமையாக வீசுவதில் தடுமாறினார். ஆனால் அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா அதை நன்றாக செய்தார். அவருடைய பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனால் ஃபிட்னஸ் மற்றும் பந்து வீச்சில் இன்னும் முன்னேற்றமும் தேவை. இன்னும் அவருக்கு உண்மையான சோதனைகள் இருக்கிறது” என்று கூறினார்.



