
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ஆம் தேதியான இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன் வரை 2 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களுடன் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 53 ரன்களுடனும், ஆலி போப் 44 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி சார்பாக ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 46 ரன்களை எட்டிய போது இந்திய அணிக்கு எதிராக முதல் சர்வதேச வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் ஜோ ரூட் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் அவர் 46 ரன்களை எட்டிய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக 3000 ரன்களை கடந்தார். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை குவித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் அரைசதம் அடித்த அவர் இந்த மூன்றாவது போட்டியில் அடித்த அரைசதம் மூலம் இந்த தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 35 ஓவருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்.. கீப்பிங் செய்ய வந்த துருவ் ஜுரேல் – என்ன நடந்தது?
இங்கிலாந்து அணிக்காக கடந்த 2012-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 155 போட்டிகளில் விளையாடி 36 சதம் மற்றும் 66 அரைசதம் என 13115 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.