அந்த மனுஷனோட பீலிங் என்னனு என்னால புரிஞ்சிக்க முடியுது.. இது விராட் கோலிக்கு மட்டும் தான் – ஜிதேஷ் சர்மா நெகிழ்ச்சி

Jitesh and Virat
- Advertisement -

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஆர்.சி.பி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது பலரது மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலிக்காக தான் இந்த வெற்றி : ஜிதேஷ் சர்மா

அதோடு கடந்த 18 ஆண்டுகளாக ஒரு கோப்பைக்காக காத்திருந்த விராட் கோலியின் நீண்ட நாள் காத்திருப்புக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. விராட் கோலியின் ஜெர்சி எண் 18 என்பதனால் இந்த 18-வது சீசனில் அவருக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய ஆர்.சி.பி வீரர்கள் நேற்று இந்த வெற்றியை விராட் கோலிக்கு பரிசளித்தனர்.

- Advertisement -

இந்த இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்த பின்னர் மைதானத்தில் இருந்த ஒவ்வொரு வீரருமே விராட் கோலியிடம் சென்று கட்டியணைத்து தங்களது அன்பையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இத்தனை ஆண்டு காலமாக பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் அவரது அர்ப்பணிப்புக்காக இந்த வெற்றியையும், கோப்பையையும் கோலிக்கு அவர்கள் பரிசளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி முடிவடைந்த பிறகு வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்த அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா விராட் கோலி குறித்து போட்டி முடிந்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தருணத்தை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.

- Advertisement -

இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏனெனில் விராட் கோலி என்கிற ஒரு மனிதர் 18 ஆண்டுகளாக இதே அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 18 ஆண்டுகாலம் ஒரு கோப்பைக்காக காத்திருப்பதன் வலி என்னவென்று எனக்குப் புரிகிறது. அந்த வகையில் விராட் கோலி இத்தனை ஆண்டுகள் இந்த கோப்பைக்காக காத்திருந்து இப்போது அதை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : மேட்ச்க்கு முன்னாடி ஏ.பி டிவில்லியர்ஸிடம் இதை சொல்லிட்டு தான் விளையாடவே போனேன் – விராட் கோலி உருக்கம்

நான் ஏற்கனவே கூறியது போன்று இந்த தொடரை வென்று அவருக்கு பரிசளித்துள்ளோம். இந்த கோப்பையை வென்று அதனை மகிழ்ச்சியாக கொண்டாட தகுதியான நபர் அவர்தான் என ஜிதேஷ் சர்மா நெகிழ்ச்சியுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement