எந்த பிரஷரும் இல்ல.. பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் சீக்ரெட் இதுதான் – ஜிதேஷ் சர்மா ஹேப்பி

Jitesh Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியானது தரம்சாலா நகரில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

பஞ்சாப் அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் : ஜிதேஷ் சர்மா பேச்சு

அதனை தொடர்ந்து முதலிலே விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுமே எங்கள் கண்ட்ரோலில் இருந்ததாக உணர்கிறேன். ஏனெனில் முதலில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது 222 ரன்கள் எடுத்திருந்த வேளையில் பந்துவீச்சாளர்கள் மீது எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் போட்டி எங்களது கண்ட்ரோலில் இருந்தது.

அதேபோன்று பேட்டிங்கிலும் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரன் குவிப்பை கண்ட்ரோலுடன் கொண்டு சென்றனர். கேப்டனாக இன்றைய போட்டியில் நான் விளையாடியது நிர்வாகத்தின் முடிவு. நிர்வாகம் என்னை எந்த ரோலில் பயன்படுத்த நினைக்கிறதோ அதனை ஏற்று விளையாட நான் தயாராக இருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்த ஆர்.சி.பி.. பஞ்சாப்பை வீழ்த்தி அசத்தல் – விவரம் இதோ

ஏகப்பட்ட சீனியர் வீரர்கள் அணியில் இருப்பதால் எனக்கு கேப்டன்சி செய்வதும் எளிதாக உள்ளது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க எங்களது அணியின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாடு காரணமாகவே இந்த இனிதான வெற்றி கிடைத்தது என ஜிதேஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement