மார்ச் மாதம் எழுதி வைத்து.. சச்சின் பொன்மொழிகளை நிஜமாக்கிய ஜிதேஷ் சர்மா.. டிகே, கோலியுடன் நெகிழ்ச்சி

Jitesh Sharma
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் காலம் காலமாக சந்தித்து வந்த கிண்டல்களை உடைத்த அந்த அணி 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு விராட் கோலி முதல் புதிதாக வாங்கப்பட்ட க்ருனால் பாண்டியா வரை அனைவருமே முக்கிய பங்காற்றினர்.

அதே போல இந்த வருடம் புதிய விக்கெட் கீப்பராக வாங்கப்பட்டு விளையாடிய ஜிதேஷ் சர்மா இறுதிப்போட்டியில் 24 (10) ரன்களை அடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். முன்னதாக 2025 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆர்சிபி அணிக்கு விளையாட வந்த போது உங்களுடைய கனவு என்ன? என்று தம்மிடம் அணி நிர்வாகம் கேட்டதாக ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மார்ச்சில் எழுதி வைத்த கனவு:

அப்போது ஐபிஎல் கோப்பையை வென்று தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டுமென விரும்பியதாக ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார். அதை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இருக்கும் ஆர்சிபி அணியின் உடை மாற்றும் அறையில் எழுதி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். கடைசியில் அது உண்மையானதை ஜிதேஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இடது பக்கம் விராட் கோலி வலது பக்கம் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து ஐபிஎல் கோப்பையை பிடித்திருக்க வேண்டும். ஃபைனலில் 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்படும் போது நான் சிக்ஸர் அடித்து ஃபினிஷிங் செய்ய வேண்டும். இது 2025 – 26 ஐபிஎல் சீசனில் நிஜமாக வேண்டும் என்று விரும்புகிறேன்”

- Advertisement -

சச்சினின் வரிகள்:

“மேற்கண்ட வரிகளை மார்ச் மாதம் அணியுடன் இணைந்த போது ஆர்சிபி நிர்வாகம் உங்களுடைய கனவு என்ன? என்று கேட்டதைத் தொடர்ந்து எழுதினேன். அது உண்மையானதில் மிகவும் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். குறிப்பாக விராட் கோலி இடது பக்கமும் தினேஷ் கார்த்திக் வலது பக்கமும் நிற்கும் புகைப்படத்துடன் சேர்த்து அவர் இந்தப் பதிவை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆர்சிபி’யின் 17 வருட சோகத்தை ஒரே சீசனில் தீர்த்த ரஜத் படிதார்.. ரோஹித்தின் மாஸ் சாதனை சமன்

இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் “கனவு காணுங்கள், கனவு ஒருநாள் உண்மையாகும்” என்று சொன்ன பொன்மொழிகளை ரசிகர்களால் மறக்க முடியாது. அதே போல ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு கண்ட ஜிதேஷ் சர்மா இன்று அதை நிஜமாக்கியுள்ளார். அவரைப் போலவே ரசிகர்களும் மக்களும் தங்களுடைய வாழ்வில் கனவு கண்டு வெல்ல வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

Advertisement