சுப்மன் கில்லின் வருகையால் சஞ்சு சாம்சனுக்கு தான் சோகம்.. ஆனா ஜிதேஷ் சர்மாவுக்கு ஹேப்பி தான் – விவரம் இதோ

Jitesh and Samson
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 15 பேர் கொண்ட இந்த இந்திய அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலேயே இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி இம்மாத இறுதியில் துபாய் பயணிக்க இருக்கிறது.

சஞ்சு சாம்சனுக்கு சோகம், ஜிதேஷ் சர்மாவுக்கு ஹேப்பி :

இந்நிலையில் இந்த டி20 அணியில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நட்சத்திர வீரரான சுப்மன் கில் துணை கேப்டன் பதவியோடு திரும்பியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவருக்கு தற்போது டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது பலரது மத்தியிலும் பெரியளவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதால் நிச்சயம் அவர் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். எனவே சுப்மன் கில்லின் இந்த வருகை சஞ்சு சாம்சனுக்கு பாதகமாக அமையும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் கடந்த பல தொடர்களாக அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக சஞ்சு சாம்சன் விளையாடி வந்தார்.

ஆனால் தற்போது சுப்மன் கில் மீண்டும் அணிக்குள் வந்துள்ளதால் அவரே அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்குவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தனது இடத்தினை இழக்கும் அபாயத்தில் உள்ளார். இப்படி சுப்மன் கில்லின் வருகை சஞ்சு சாம்சனுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் சுப்மன் கில் வந்ததால் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு ஜிதேஷ் சர்மாவுக்கு கை கூடி வந்துள்ளது. ஏனெனில் சஞ்சு சாம்சனால் பின் வரிசையில் பேட்டிங் செய்ய இயலாது. அதனால் அவர் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறும் பட்சத்தில் ஜிதேஷ் சர்மா ஆறாவது இடத்தில் களமிறங்கி விளையாட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : இன்னும் 1 விக்கெட் போதும்.. முதல் இந்திய வீரராக அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ

ஏற்கனவே ஆர்.சி.பி அணிக்காக ஃபினிஷராக களமிறங்கி அசத்திய பின்னர் இந்த வாய்ப்பை பெற்றுள்ள ஜிதேஷ் சர்மா சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டால் நேரடியாக விக்கெட் கீப்பருக்கான வாய்ப்பை பிளேயிங் லெவனில் பெறுவார் என்பதனால் சுப்மன் கில்லின் வருகை இவருக்கு மகிழ்ச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement