ஹார்டிக் பாண்டியாவின் அதிரடியால் அசந்து போய் நியூசிலாந்து வீரர் செய்த ட்வீட் – இணையத்தில் வைரல்

Jimmy-Neesham-and-Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணியை தனிநபராக வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என்று கூறலாம். ஏனெனில் இந்த போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கிய அவர் 33 பந்துகளை சந்தித்த வேளையில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 51 ரன்களை குவித்து அசத்தினார். இப்படி பேட்டிங்கில் மட்டும் அசத்தியதோடு நிற்காமல் பந்து வீச்சிலும் தனது பங்களிப்பை வழங்கிய பாண்டியா முழுவதுமாக நான்கு ஓவர்களையும் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கை கொடுத்ததால் இந்திய அணி வெற்றி பெற்றதோடு சேர்த்து அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ஜிம்மி நீசம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பாண்டியா குறித்து ஒரு அருமையான கருத்தினை பகிர்ந்துள்ளார்.

எப்பொழுதுமே கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள், கிரிக்கெட்டில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் என அனைத்து நடப்புகள் குறித்தும் ஜிம்மி நீசம் தனது சமூக வலைதள பக்கத்தில் சில பதிவுகளை இடுவது வழக்கம். அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு பாண்டியா குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த ட்விட்டர் கருத்தில் :

- Advertisement -

பாண்டியா 100% ஃபிட்டாக இருந்தால் அவரைப் போன்ற ஒரு அற்புதமான வீரர் வேறு யாரும் இருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த டிவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : IND vs ENG : 2 ஆவது டி20 போட்டியில் அணிக்கு திரும்பும் 4 சீனியர் வீரர்கள் – யாருடைய இடங்கள் பறிபோகும்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடிய பாண்டியா அறிமுகத் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்து அசத்தியதோடு இந்திய அணியிலும் தற்போது கம்பேக் கொடுத்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டி20 உலகக்கோப்பை தொடரில் அவரது இடத்தை இப்போதே உறுதி செய்து விட்டார் என்று கூறலாம்.

Advertisement