இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 4ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டிக்காக அனைத்து வீரர்களுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் துவக்க வீரர்களான மாயங்க் அகர்வால் உடற்பயிற்சி கூடத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தினமும் நாம் செய்யும் கடின உழைப்பின் மூலமே நமது உடம்பில் மாற்றங்களை உணர முடியும் என்று அவர் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த உடற்பயிற்சி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எப்போதுமே இந்திய அணி வீரர்கள் ஃபிட்னஸ் இருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனாலும், வீரர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் அதிக நேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகின்றனர். அப்படி இவர் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை கண்ட நியூசிலாந்து அணியின் வீரரான ஜிம்மி நீஷம் அதற்கு : வாழ்த்துக்கள் ஆண் குழந்தையா ? பெண் குழந்தையா ? என்று கிண்டலாக ஒரு பதிலை அளித்துள்ளார். இது நல்ல டைமிங் காமெடியாக தற்போது அவரது பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடியவர்கள் என்பதும் இருவருக்கும் நல்ல நட்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது