2019 உ.கோ.யை தாரை வார்த்துவிட்டு பட்லருடன் ஒரே ரூமில் விளையாடியது வேதனையிலும் வேதனை – நியூசி வீரர் ஆதங்கம்

England
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் உலகக்கோப்பையை வெல்வதை மிகப்பெரிய லட்சியமாக வைத்திருப்பார்கள். ஆனால் அந்த லட்சியத்தில் வென்றும் கோப்பையை முத்தமிடாமல் போவது மிகப்பெரிய அநியாயம், துரதிஸ்டவசம், வேதனை என்று கூறலாம். அந்த அத்தனை வார்த்தைகளுக்கும் வரலாற்றில் ஒரே எடுத்துக்காட்டாக இருப்பதுதான் 2019 உலகக்கோப்பையாகும். இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை தோற்கடித்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து சேர்த்த 241/8 ரன்களை துரத்திய இங்கிலாந்தும் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிகச்சரியாக 241 ரன்கள் எடுத்தது.

Eng-1

- Advertisement -

வரலாற்றிலேயே முதல் முறையாக அப்படி இறுதிப் போட்டி சமனடைந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இங்கிலாந்து எடுத்த 15 ரன்களை துரத்திய நியூசிலாந்தும் முழுமூச்சுடன் போராடி 15/1 ரன்கள் எடுத்தது. குறிப்பாக கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்ற மார்ட்டின் கப்டிலை ஜோஸ் பட்லர் ரன் அவுட் செய்து 1 ரன் மட்டுமே எடுக்க வைத்தார். அப்போது தான் வரலாற்றின் மிகப்பெரிய முட்டாள்தனமான விதி கடை பிடிக்கப்பட்டது. அதாவது நியூசிலாந்தை விட இங்கிலாந்து அதிக பவுண்டரிகளை அடித்ததால் உலகக்கோப்பையை அந்த அணிக்கு ஐசிசி தாரை வார்த்தது.

வேதனையுடன் நீசம்:
மறுபுறம் எந்த இடத்திலும் தோல்வியடையாத போதிலும் விதியின் விளையாட்டால் உலகக்கோப்பையை தொடும் வாய்ப்பை இழந்த நியூசிலாந்து காலத்திற்கும் மறக்க முடியாத வேதனையை சந்தித்தது. அதுபோக அப்போட்டியில் இலங்கையின் அம்பயர் குமார் தர்மசேனா 4 ரன்களுக்கு பதில் 5 ரன்களை கொடுத்த முடிவும் நியூசிலாந்துக்கு பாதகமாக அமைந்தது. மேலும் நியூசிலாந்து தோற்காத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் கூட உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுப்பதற்கு இங்கிலாந்து அழைக்காமல் சுயநலத்துடன் நடந்து கொண்டதை எப்போதும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

newzeland
newzeland

இந்நிலையில் அந்த தோல்வியை விட இங்கிலாந்தின் ஜோஸ் பட்லருடன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஒரே அறையில் ஒரே அணியில் இணைந்து விளையாடியது மிகப்பெரிய வேதனையாக இருந்ததாக நியூசிலாந்தின் ஜிம்மி நீசம் கூறியுள்ளார். அந்த உலகக்கோப்பையில் 3 விக்கெட்டுக்களையும் முக்கியமான சூப்பர் ஓவரில் அதிகபட்சமாக 13* (5) ரன்களையும் விளாசி வெற்றிக்குப் போராடிய இவர் இது பற்றிய சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த உலகக்கோப்பைக்கு பின் இந்தியாவில் 2 மாதங்கள் விளையாடியபோது ஒரே ஹோட்டல் அறையில் ஜோஸ் பட்லருடன் தங்கியிருந்தது எந்த வகையிலும் மரியாதை நிமித்தமான உதவியைக் கூட கொடுக்கவில்லை. ஆனால் அது சிறிய விஷயமாகும். அதை (உலககோப்பை தோல்வி) நான் எப்போதும் மறக்கமாட்டேன். அப்படி ஒரு தோல்வியிலிருந்து யாரும் சுலபமாக வெளிவந்து விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது என்னுடைய கேரியரில் ஏற்றுக்கொண்டு கடந்து செல்லவேண்டிய பகுதியாக இருக்கிறது”

Neesham

“ஏனெனில் அதன்பின் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்கும் போது தொடர்ச்சியாக அனைவரும் அதைப்பற்றி எனது எஞ்சிய வாழ்நாளில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அது வேறு வழியில் முடிப்பதற்கு ஏற்றதாக இருந்திருக்கும். ஆனால் அது வெவ்வேறு அம்சங்களில் சில கதவுகளைத் திறந்துவிட்டது. எனவே நீங்கள் அனைத்து நல்லது மற்றும் கெட்டதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த உலகக் கோப்பை முடிந்த விதத்தை வைத்து அது அதில் தோல்வியடையாத அணியிலிருந்த ஒருவரின் வாழ்நாளில் நடந்த மோசமான தருணமென்று கூறலாம்”

- Advertisement -

“அதிலிருந்து தப்பி வாழ்வதற்கு வாழ்க்கையில் தொடர்ந்து முன்னோக்கி செல்வது வாழ்நாளில் மற்ற அனைத்தையும் சமாளித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு கொடுக்கிறது. அதன்பின் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் போன்ற தொடரில் அனைத்தையும் மனதில் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே சில அதிரடியான பவுண்டரிகளை விளாசி அணியின் வெற்றியில் பங்காற்றுகிறேன். ஒருவேளை அந்த உலகக் கோப்பை மட்டும் நடைபெறாமல் இருந்தால் இன்னும் நான் மகிழ்ச்சியுடன் முன்னோக்கி சென்று கொண்டிருப்பேன்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா ஒரு பலவீனமான குழப்பமான கேப்டன் – முன்னாள் பாக் வீரரின் கருத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு

ஒரு ஆல்-ரவுண்டராக தற்போது 31 வயதாகும் நான் எப்போது எனது முடிவை சந்திப்பேன் என்று தெரியாது. எனவே ஒவ்வொரு கிரிக்கெட் தொடரையும் பரிசாக நினைத்து விளையாடி நடப்பதை எதிர்கொண்டு வருகிறேன்” என்று கூறினார். அந்த தோல்விக்கு பின் 2021இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியடைந்த நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த இவர் அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் 335 நாட்கள் தான் உள்ளது என்று நேர்மையுடன் பேசும் அளவுக்கு 2019 உலகக்கோப்பை பக்குவத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement